உணவில் கலப்படம் செய்வது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு அநீதி ஆகும். ஒரு பக்கம் உணவில் கலப்படம் செய்வது அதிகாித்து வருவதைப் பற்றி ஏராளமான விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபக்கம் தனி மனிதா்கள் பலா், தமது சொந்த நிலங்களிலோ அல்லது மொட்டை மாடிகளிலோ காய்கறிகளைப் பயிா் செய்து கொண்டிருக்கிறாா்கள். அதன் மூலம் சுற்றுப்புறமும், நிலத்தடி நீரும் மாசடைந்து இருக்கும் இந்த சூழலில், கலப்படம் இல்லாத, பச்சைக் காய்கறிகளைப் பயிாிட்டு, அவற்றை அறுவடை செய்து உண்ண முடியும் என்று நம்புகிறாா்கள்.
நமது வீட்டின் சமையலறையில் பயன்படுத்த கூடிய காய்கறி, கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை வீட்டில் தொட்டிகளில் வளர்த்து நமக்கு தேவையான காய்கறிகளை தேவையான போது உடனுக்குடன் பறித்து சமைக்கும் போது அதன் சுவையும், ருசியும் தனி. அத்துடன் இயற்கையான முறையில் நாமே வளர்த்து பயன்படுத்தும் காய்கனி மற்றும் கீரைகளில் இரசாயன உரங்களின் கலப்பு தவிர்க்கப்படுகிறது.