ஜீரோ பட்ஜெட் கீரை சாகுபடி : மாதம் ரூ.1லட்சம் லாபம் சம்பாதிக்கும் இயற்கை விவசாயி.! - Agri Info

Education News, Employment News in tamil

November 10, 2021

ஜீரோ பட்ஜெட் கீரை சாகுபடி : மாதம் ரூ.1லட்சம் லாபம் சம்பாதிக்கும் இயற்கை விவசாயி.!

அதிக முதலீடுகள் இல்லாமல், ஜீரோ பட்ஜெட் முறையில் இயற்கை விவசாயத்தில் கீரை வகைகளை சாகுபடி செய்து மாதம் ரூ.1லட்சம் லாபம் பார்த்து வருகிறார் ஓசூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி நாராயண ரெட்டி அவர்கள்.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் (Zero Budget farming)

வெளியில் இருந்து அதிக இடுபொடுட்கள் வாங்காமல் நாட்டு மாடு சாணம், கோமியம், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை தயார் செய்து சாகுபடியை மேற்கொள்வதால், இதில் அதிக செலவினம் இல்லை என்று குறிப்பிடுகிறார், மேலும் இது போன்ற இயற்கை விவசாய முறையை மேற்கொள்வதால், குறைந்த அளவே தண்ணீர் பயன்பாடு தேவைப்படும் என்றும், மண் வளமும் மேம்படும் என்றார்.

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் என்றுமே கிரைக்கு முக்கிய பங்கு உண்டு, மருத்துவர்களும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவ்வப்போது கூறிவருகின்றனர், எனவே தான் மக்களின் தேவைக்கு ஏற்ப கிரை சாகுபடியை மேற்கொள்வதாக நாராயண ரெட்டி குறிப்பிட்டார்.

அரசின் உதவிகள்

இயற்கை விவசாயத்தை உக்குவிக்க மாநில அரசும் அதிக சலுகைகளை வழங்கி வருவதாகவும், இதனை விவசாயிகள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் தனது வளர்ச்சிக்கு அரசும், ஓசூர் வேளாண் துறையினரும் அதிகம் உதவியதாகவும், இது தனது தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவியதாக நாராயண ரெட்டி  தெரிவித்தார். 

மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஓசூரில் மத்திய அரசின் (Paramparagat Krishi Vikas Yojana) பாரம்பரிய கிருஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகளையும் வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது, இதனால் இயற்கை விவசயம் முக்கியத்துவம் அடைந்து வருகிறது எனவும் கூறினார். 

கீரை விலை

கீரைவகை அனைத்தும் 200 கிராம் 18 ரூபாய்க்கு மொத்த விலை மற்றும் சில்லரை விலைகளில் விற்கப்படுகிறது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுவதால் அதிக தூரத்தில் இருந்தும் கூட பொதுமக்கள் வந்து இங்கு கீரைகளை வாங்கி செல்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானத்தை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு ரூ.5000 வரை லாபம் ஈட்டி வருகிறார். மேலும், மாடிதோட்டத்திற்கு தேவையான இடுபொருட்களை தயார் செய்தும் வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கீரை சாகுபடியில் லாபம் சம்பாதிக்கிறார். கூலி வேலை ஆட்களை தவிற வேறு எதற்கும் செலவு இல்லை என்றும் மகிழ்ச்சியுடம் குறிப்பிடுகிறார் நாராயண ரெட்டி.

No comments:

Post a Comment