மண் பரிசோதணை | மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை |மண் பரிசோதனை ஆய்வகங்கள் | மண்வள அட்டை என்றால் என்ன? - Agri Info

Adding Green to your Life

November 10, 2021

மண் பரிசோதணை | மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை |மண் பரிசோதனை ஆய்வகங்கள் | மண்வள அட்டை என்றால் என்ன?

 மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்

  • இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
  • பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
  • மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
  • மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
  • மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
  • பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
  • தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்

  • மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
  • அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்

மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

  • நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
  • உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
  • பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

  • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
  • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.
  • இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
  • நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
  • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
  • வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.
  • சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி  மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.
பயிர் வகைமண் மாதிரி எடுக்கும் ஆழம்
(அங்குலத்தில)(செ.மீ.)
புல் மற்றும் புல் வெளி2

6

9

12,24,36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
5
நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்)
15
பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்)
22
நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள்30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

  
  
  
Soil Sampling
  
Soil SamplingSoil Sampling
  
Soil SamplingSoil Sampling
  
Soil Sampling

Soil Sampling

மண் பரிசோதனை ஆய்வகங்கள்


இடம்முகவரி

கடலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம்
சேமமண்டலம்,
கடலூர் – 607 001

காஞ்சிபுரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சுபேட்டை
காஞ்சிபுரம் -631 502

வேலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்

தர்மபுரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி – 638 702

சேலம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ்
வனியகலா கல்யாண மண்டபம் அருகில்
சேலம் – 636 007

கோயமுத்தூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல்
கோயமுத்தூர் – 642 013

புதுக்கோட்டை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்

ஈரோடு

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003

திருச்சி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காஜாமலை
திருச்சி – 620 020

மதுரை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -625 001

ஆடுதுறை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்

தேனி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
136/2, 2வது வீதி,
சடயல் நகர்
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்

 திண்டுக்கல்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
3,  கூட்டுறவு காலனி
திண்டுக்கல் – 624 001

சிவகங்கை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு
சிவகங்கை – 630 561

 பரமகுடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்

திருநெல்வேலி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
எண்.37, சங்கர் காலனி
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி -2

தூத்துக்குடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி– 628 501
தூத்துக்குடி மாவட்டம்

நாகர்கோவில்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, சுந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001

ஊட்டி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஊட்டி – 643 001

நாமக்கல்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
142 –H, கிஷோர் வளாகம்
(HDFC வங்கி எதிரில்)
சேலம் மெயின் ரோடு
நாமக்கல் – 637 001

திருவாரூர்

ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை வளாகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் மேல்மாடியில்
திருவாரூர் – 610 001

திருவள்ளூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் to ஆவடி ரோடு
திருவள்ளூர் – 602 003

பெரம்பலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
93F/21A வெங்கடாசலபதி நகர்
புது பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210

கிருஷ்ணகிரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்
கிருஷ்ணகிரி – 635 001

விருதுநகர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் காம்ப்ளக்ஸ்
விருதுநகர் – 626 001

கரூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
தில்லை நகர், ராஜ்னூர்
தான்தோனி
கரூர் – 639 003

அரியலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வளஜனகரம்
அரியலூர் – 621 704

 நாகப்பட்டிணம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் வளாகம்
நாகப்பட்டிணம் – 611 001

விழுப்புரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம் முக்கிய திட்ட வளாகம்
விழுப்புரம் – 605 602

திருவண்ணாமலை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கோட்டம்பாளையம் ரோடு
வெங்கிகால்
திருவண்ணாமலை – 606 604

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

இடம்முகவரி
திருவள்ளூர்முதுநிலை வேளாண் அலுவலர்
நடமாடும்  மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் To ஆவடி ரோடு
திருவள்ளூர்
திருவண்ணாமலைமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காமண்பாளையம், வெங்கிகல்
திருவண்ணாமலை -  606 604
விழுப்புரம்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை அலுவலர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலுக வளாகம்
விழுப்புரம்
கிருஷ்ணகிரிமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்,
கிருஷ்ணகிரி – 635 001
திருப்பூர்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் விரிவாக்க மையம்
பல்லடம்
திருப்பூர்
ஈரோடுமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
மதுரைமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -  625 001
பெரம்பலூர்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
937/21A, வெங்கடாசலபதி நகர்
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கரூர்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
1/163/1, சேலம் மெயின் ரோடு
வெண்ணமலை
கரூர் மாவட்டம்
நாமக்கல்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
நாராயணம்பாளையம்
மோரூர் அஞ்சல், திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் – 637 304
திருவாரூர்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
19B, பெரிய மில் வீதி
திருவாரூர் – 610 001
பரமகுடிமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
தூத்துக்குடிமுதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் ஆராய்ச்சி நிலையம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி – 627 701
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, செளந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
நாகப்பட்டிணம்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் காம்பவுண்ட்
வெள்ளிபாளையம்
நாகப்பட்டிணம் – 611 001
விருதுநகர்முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
No.  185 – ஸ்டேட் பாங்க் 2வது மாடி
மதுரை ரோடு
அருபுக்கோட்டை – 629 101
விருதுநகர் மாவட்டம்



மண் மதிப்பீடு அட்டவணை

மண் பரிசோதனை குறிப்புகளின் வரையளவு அட்டவணை

ஊட்டப் பொருள்குறைந்தநடுத்தரம்அதிகம்
அங்கக கரிமம்< 0.5%0.5-7.5%> 0.75%
இருக்கக்கூடிய தழைச்சத்து (N)< 240 கி.கி/ஹெக்240-480 கி.கி/ஹெக்> 480 கி.கி/ஹெக்
இருக்கக்கூடிய மணிச்சத்து(P)< 11.0 கி.கி/ஹெக்11-22 கி.கி/ஹெக்> 22 கி.கி/ஹெக்
இருக்கக்கூடிய சாம்பல்சத்து (K)< 110 கி.கி/ஹெக்110-280 கி.கி/ஹெக்>280 கி.கி/ஹெக்

மண் வகைகள்காரநிலை
அமிலங்கள்<6.0
சாதாரண  நிலையிலிருந்து உப்புத்தண்ணீர்6.0-8.5
காரத்தன்மையாக மாற்ற வேண்டும்8.9-9.0
காரத்தன்மை>9.0

மொத்த தின்மக் கரைபொருள் (கடத்தும் ஆற்றல் மில்லி எம்ஹெச்ஒஸ் /செ.மீ2)

<1சாதாரணமாக
1-2முளைப்பிற்கு திறனாய்வு
2-4பயிர்களின் வளர்ச்சிக்கு திறனாய்வு செய்தல்
>4நிறைய பயிர்களுக்கு சேதாரம்



மண்வள அட்டை

மண்வள அட்டை என்றால் என்ன?

மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது. விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையின் மூலம் நிர்ணயிக்கும் மண்வளத்தின் தரம் பெரும்பாலும் விவசாயிகளின் அனுபவத்தைப் பொருத்ததேயன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல. ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்

மண்வள அட்டையை உபயோகிப்பது எப்படி?

  • மண்வகைகள், வயலின் சரிவு, பயிர் சுழற்சி, உர மேம்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒரு பண்ணையில் உள்ள நிலங்களை தனித்தனியே பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தவும்
  • ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அல்லது மூன்று பொருத்தமான இடங்களை தேர்வு செய்து மண்ணின் பண்புகளை ஆய்வு செய்யவும்
  • பின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் மண்ணின் தரத்தினை வளமானது, சுமாரான வளம், வளம் குன்றியது என்று தரம் பிரித்து அதற்கான கட்டத்தில் குறியிட்டு நிரப்பவும்
  • மண்ணில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவைகளை குறிப்புப் பகுதியில் விபரமாக எழுதவும்

No comments:

Post a Comment