திருந்திய நெல் சாகுபடி - Agri Info

Education News, Employment News in tamil

November 10, 2021

திருந்திய நெல் சாகுபடி

 

திருந்திய நெல் சாகுபடி

இளநாற்று (14 வயது நாற்றுகள்)
குத்துக்கு ஒரு நாற்று
சதுர நடவு (25 X 25 செ.மீ.)
களைக்கருவி உபயோகித்தல்
காய்ச்சல் பாய்ச்சல் முறை நீர்ப்பாசனம்
இலைவண்ணஅட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை
திருந்திய நெல் சாகுபடி
  • பருவம் மழையற்ற வறட்சிப்பருவம் மிகவும் ஏற்றது.
  • அதிகமழை பெய்யக்கூடிய காலத்தில் பயிர் எண்ணிக்கையை நிலைக்கச்செய்வது சற்று கடினம், பொதுவாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும் கடற்கரை பகுதிகளில் நடவு செய்த முதல் இரண்டு வாரங்கள் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
இரகங்கள்
  • ஒட்டு இரகங்கள் மற்றும் அதிக தூர்கள் பிடிக்கும் இரகங்கள்
நாற்றங்கால்

விதையளவு

  • 7 - 8  கிலோ (குத்துக்கு ஒரு நாற்று)
  • 12-15 கிலோ/ ஹெக்டர் (குத்துக்கு இரண்டு நாற்று)
புதிய பாய்நாற்றங்கால் தயாரிக்கும் முறை
  • நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு எக்டர் நடவு செய்ய 20x7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.
  • உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.
மண் கலவை கலைத்தல்
    • அவ்வாறு உயர்த்தப்பட்ட பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்பி அதன்மீது நாற்றங்காலுக்கு மண் பரப்ப படவேண்டும்
    • பரப்புவதற்கான மண் வயல் மண்ணே போதுமானது. களிமண் விகிதம் அதிகம், இருப்பின் மணல் கலக்கவும், அதிகம் மணலாக இருப்பின் சற்று களிமண் கலக்கவும் அல்லது
    • மண் 70 சதம் + 20 சதம் நன்கு மக்கிய தொழுஉரம் + 10 சதம் உமி அல்லது தவிடு இவற்றுடன் 15 கிலோ பொடியாக்கப்பட்ட டை அம்மோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ 17 :17: 17 காமளெக்ஸ் உரம் இட வேண்டும்.
    • நாற்றுப் பாத்திகள் அமைக்க மரச் சட்டத்தினால் தயாரிக்கப்பட்ட ‘கட்டளை’ தேவை. அக்கட்டளை 2 அங்குல உயரம் 1x1 மீ நீளம் அகலமோ அல்லது 
    • 1x0.5 மீ நீளம் அகலமோ உள்ளதாய் அமைத்துக்கொள்ளலாம். அகலத்தில் குறுக்கே (50 செ.மீ. ஒர குறுக்குச் சட்டமும்) நீளவாக்கில் ஒவ்வொரு 20 செ.மீக்கு ஒரு சட்டம் வீதம் நான்கு சட்டங்கள் அமைத்து 20x50 ச.செ.மீ. என்ற பாத்திகள் மொத்தம் 5x2x10 அமைக்கப்படலாம்.
    • கட்டளையை 1.2 மீ அகலமுள்ள பாத்தியின் மையத்தில் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் வைத்து. தயாராக வைத்துள்ள மண் கொண்டு நிரம்பி, அழுத்தி, பின்னர் கட்டனையை உருவுதல் வேண்டும். அப்படிச்செய்யும்போது 10 நாற்று பாத்திகள் தயாராவதைக் காணலாம்.
மரச்சட்டத்தில்மண்கலவையைநிரப்புதல்

மண்ணில் உயர் உரங்கள் பயன்பாடு : 100 m2 நாற்றங்கால் பகுதிக்கு ஆசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் மைக்கோரைசஸ் பூஞ்சை 5 கிலோ அளிக்கவும்.

இவ்வாறு தேவையான நாற்றுப்பாத்திகள் அமைத்துக்கொள்ளவேண்டும்.முளை கட்டிய விதையை ஒரு சதுர மீட்டருக்கு 90 முதல் 100 கிராம் வரை சீராகத் தூவி மேலாக அழுத்தி விடவேண்டும் (100 கிராம் வரை விதை ஊறவைத்து பின்னர் 130 கிராம் எடை அடையலாம்).
விதை மீது சீராக மணல் தூவி அழுத்திய பின்னர் நீர் தெளிக்கவேண்டும். பூவாளிகொண்டு நீர் தெளிப்பது நன்று. நீர் தெளிப்பது தேவைக்கேற்றவாறு அமையவேண்டும்.
    • ஒரு எக்டர் நடவு செய்ய 100 ச.மீ. நாற்றங்கால் அதாவது சுமார் 1000 நாற்றுப் பாத்திகள் தேவைப்படும்.
    • ஒரு வாரத்திற்குப் பின்னர் நாற்று வளர்ந்து விட்ட நிலையில் வாய்க்காலில் நீர் நிரப்பும்போது, நீர் நாற்றின் அடிப்பகுதியில் நனைத்து தேவையான வளர் ச்சியைத் தரவல்லதாக அமையும்.
    • நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து முதல் வாரம் முடிந்த நிலையில் 0.5 சதம் யூரியா ரூ 0.5 ஜிங்சல்பேட் கரைசல் தெளிக்கப்படலாம்.
    • இவ்வகை நாற்று 14-15 நாட்களில் நடவு செய்வதற்கு தயார் பாத்திகள் ஒவ்வொன்றும் அடியோடு எடுத்துச் செல்லாம்.
நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்தல்
மாற்றியமைக்கப்பட்ட பாய் நாற்றங்காலில் உயரடுக்கு நாற்று உற்பத்தி : விதை வலுவூட்ட இயற்கை மணலுடன் 1.0% KCI கலவை மற்றும் பவுடர் DAP 2.0 கி மற்றும் சூடோமேனஸ் 240கி / சென்ட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இதை தொடர்ந்து 0.5% யூரியா கரைசலைக் கொண்டு மருந்தூட்டல் வேண்டும்.
நடவு வயல் தயாரித்தல்
    • நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு, மிகவும் சீரான முறையில் நடவு வயல் சமன் செய்யப்பட வேண்டும். நீர் நிர்வாகமே இம்முறை நடவின் சிறப்ப அம்சம், அச்சிறப்பை அடைவதற்கு சமன் செய்யப்பட்ட நிலம் மிகவும் அவசியம்.
நடவு செய்தல்
    • 14-15 வயதான நாற்றுகள் 1- 2 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்
    • 25 x  25 செ.மீ (10 x10 அங்குலம்) சதுர நடவு
    • அவ்வாறு நடவு அமைய கயிற்றில் முடிச்சு ஒவ்வொரு 10 அங்குத்திற்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம் அல்லது சமன் செய்யப்பட்ட வயல் 10 அங்குலத்திற்கு கோடுகள் குறுக்காகவும் நெடுக்காகவும் ஏற்படுத்தி அதன்பின்னர் அக்கோடுகள் சந்திக்கும் இடங்களில் நடவு செய்து சரியான வரிசையை ஏற்படுத்தலாம். இவ்வகைக் கட்டங்கள் அமைக்க சிறிய எளிய கருவிகளும் பயன்படுத்தலாம்
    • நாற்றுக்கள் பாத்திகளிலிருந்து பிரித்த 30 நிமிடங்களுக்குள் நடவு செய்யப்பட வேண்டும்.
    • நடவு செய்தவுடன் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பயிரை நிலை நிறுத்த சிரமங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குத்துக்கு ஒரு நாற்று (சதுர நடவு)
நீர் நிர்வாகம்
    • மண் மறைய நீர் கட்டுதல் முதல் 10 நாட்களில் மிக முக்கியம்
    • அதன் பின்னர் 1 அங்குல உயரத்திற்கு ‘நீர் கட்டி மறைந்து’ மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்த முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். இம்முறை, இளங்கதிர் உருவாகும் பயிர்ப்பருவம் வரை பின்பற்றப்படவேண்டும்.
    • இளங்கதிர் உருவானதிற்குப்பின் 2 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ச்சி எட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிடவேண்டும்.
நீர் கட்டி மறைந்து பின் நீர்ப்பாய்ச்சுதல்
களை மேலாண்மை
    • நடவு வரிசையில் அமைக்கப்பட்டதால் களைகளை உருளைக் களை எடுப்பான் கொண்டு மண்ணினுள் அழுத்தி விடுதல் வேண்டும்.
    • உருளைக் களை எடுப்பானை முன்னும் பின்னுமாய் அசைத்து களை எடுப்பானை உருட்டி களையைக்களைவதுடன் மண்ணினுள் காற்று புகுமாறு உருட்டுவது பயிரின் வேரிற்கு நல்லது.
    • இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே ஆரம்பிக்பப்படலாம். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.
    • பயிர்களுக்கு இடையே வேரிற்கு அருகில் உள்ள களைகளைக் களைய கைக்களை எடுப்பதும் அவசியமாகின்றது.

நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக்கருவியை குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல் 
உர மேலாண்மை
    • நடவு முறை நெல் சாகுபடியைப் பார்க்கவும் (பகுதி 1,2,3)
    • தழைச்சத்து மேலாண்மைக்கு இலை வண்ண அட்டை (LCC) மூலம் முடிவு செய்தல், உரம் மற்றும் பணச்சிக்கனமும், மேன்மையான பயிர்வளர்ச்சியும் மகசூலும் தரவல்லது.
    • பசுந்தாள் மற்றும் தொழுவுரம் பயன்படுத்தி நெல் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கலாம்.
    • களர் நிலத்தில், சுழல் களை எடுக்கும்பொழுது ஆசோபோஸ்மெட் 2.2கி / ஹெக்டர் அளிக்கவும் மற்றும் PPFM 500 மிலி/ ஹெக்டர் இலைவழித் தெளிக்கவும்.
இலைவண்ணஅட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை
    • மற்ற பயிர் நுட்பங்கள் நடவு முறைக்கு சொல்லப்பட்டது போன்றதேயாகும்

No comments:

Post a Comment