Search

மண்புழு உரம் : கேள்வி பதில் | நான் புழுவைப் பாதியாக வெட்டினால் இரண்டு புழுக்கள் கிடைக்குமா?

 மண்புழு உரம் 

மண்புழு உரம் என்றால் என்ன?

மண்புழு உரம் என்பது, மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. அது புழு வார்ப்புகள் (கழிவு பொருட்கள்), மட்கிய அங்கக பொருட்கள், உயிருள்ள மண்புழுக்கள், பட்டுக்கூடு மற்றும் பிற உயிரினங்கள் உள்ளடக்கிய ஒரு கலவையாகும். மண் புழு உரம் தயாரிப்பு, நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக  கழிவுகளை மட்க செய்வதற்கான  ஒரு சரியான பயனுள்ள, செலவு குறைந்த மற்றும் திறமையான மறுசுழற்சி தொழில்  நுட்பமாகும்.

மண்புழு வளர்ப்பு என்றால் என்ன?            

மண்புழு வளர்ப்பு என்பது மண்புழுக்களை வளர்த்தல் என்று வரையறுக்கப்படுகிறது. மண்புழுக்கள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகிறது. மட்கிய எரு உருவாக்குபவை மற்றும் மட்கிய பொருட்களை உண்ணுபவை என வரையறுக்கப்படுகிறது. முதல் குழு மேற்பரப்பில் குடியிருந்து கிட்டத்தட்ட 90% அங்கக பொருட்களை உண்ணுகின்றன. அவைகளின் நிறம் பொதுவாக கறுப்பாக இருக்கும். மேலும் எபிஜீயிக் அல்லது கழிவுப் பொருட்களை உண்ணும் மண்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன.  பொதுவாக இந்த மண்புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க உதவுகின்றன. இரண்டாவது குழு, மட்கிய பொருட்களில் துளையிடும் புழுக்கள், உரம் தயாரிப்பிலும் மற்றும் மண்ணை இளக வைத்தலிலும் பயன்படுகின்றன. பொதுவாக, துளையிடும் புழுக்கள் மண்ணில் மட்கிய உரத்தைக் கலந்து விநியோகிப்பதில் உதவும்.

மண்புழுக்கள் விரைவாகவும் திறமையாகவும் அங்கக கழிவுகளை சிதைக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. எனினும், மண்புழு உரமாக்கல் திறனை அதிகரிக்க, கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். புழுக்கள் உயிர்ப்புடன் நன்கு செழித்து வளர ஈரப்பதம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, இனப்பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மண்புழு உரமாக்கலில் மிகவும் நன்மை உடைய அம்சம் என்னவென்றால், அங்ககக் கழிவுகள் அழுகும் போது, ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குகிறது, இது ஒரு முழு காற்று உட்புகும் அமைப்பு ஆகும். மண்புழு பற்றிய கருத்து, இந்த நூற்றாண்டின் 50 களில் நன்றாக அறியப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டு மண்புழுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அங்கக கழிவுகளை திறமையாக அகற்ற, மண்புழு தொழில்நுட்பம் தொடர்பான பல பரிசோதனைகளை மேற்கொண்டது.

மண்புழுக்கள் எப்படி வேலை செய்கிறது?

மண்புழுக்கள் தங்கள் உணவை, தங்கள் உடல் எடையைப் போல இரண்டு முதல் ஐந்து மடங்கு எடுத்துக்கொள்ளும்.

அவைகள் தங்கள் வளர்ச்சிக்கு, ஒரு சிறிய அளவு கழிவு பொருட்களை உட்கொள்ளும். பின்னர் வெர்மிகாஸ்ட்ஸ் என்ற சளி பூசிய ஜீரணமாகாத பகுதியை வெளியேற்றும். மண்புழு எடுத்துக் கொள்ளும் உணவானது, பல்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்குட்பட்டு, அதனுடைய உணவுக்குழாயில் அரைக்கப்பட்டு, அங்ககப் பொருட்களை மண்புழு உரமாக மாற்றுகிறது. மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தாவரங்களினால் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நீரில் எளிதில் கரையும் பொருளாக உள்ளது. மண்புழு உரதில், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகள், வைட்டமின்கள், என்சைம்கள், உயிர் எதிர்ப்பு பொருள், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அடங்கி உள்ளன.

மண்புழுக்கள் இல்லாமல் மண்புழு உரம் தயார் செய்ய முடியுமா?

ஆம்! மண்புழு உரத்தின் தரத்தைக் கருத்தில் கொள்ளும் போது, மற்ற உர வகைகளைக் காட்டிலும் மேன்மையானது. மேலும் மண்புழுக்கள் குப்பை, சாணம் மற்றும் பிற அங்கக பொருட்களை நன்றாக துகள்களாக அரைத்து, அதன் மூலம் மேற்பரப்புப் பகுதியை அதிகரித்து, வேகமான சிதைவை ஊக்குவிக்கிறது. இப்பொருட்கள் மண்புழு உடல் வழியாக சென்று வேர்மிகாஸ்ட்களை உருவாக்குகிறது.  மண்புழு இல்லாமல் இருக்கும் மண்ணைவிட, மண்ணுடன் இருக்கும் மண் புழு உரம் 100 மடங்கு பாக்டீரியாவைக் கொண்டிருக்கிறது. மேலும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் மண்புழு உரத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

என் மண்புழு உரம் உற்பத்திப் பிரிவு நிறைய சிவப்பு எறும்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. நான் இரசாயனம் பயன்படுத்தாமல் இப்பிரச்சினைகளை சமாளிக்க என்ன உயிரியல் நடவடிக்கைகள் உள்ளன?

நீங்கள் உங்கள் உற்பத்திப் பிரிவில் எறும்புகள் நுழையாமல் தடுக்க உங்கள் பிரிவின் அனைத்து பக்கங்களிலும் மிளகாய்ப்பொடி தூவி விடவும்.

நான்  மண்புழு உரம் மற்றும் மண்புழு உரம் கழுவிய தண்ணீர் பற்றிய தகவல்களை எங்கே பெற முடியும்?

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றும் தலைவர்
சுற்றுச்சூழல் அறிவியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003.

எங்கே நான் மண்புழுவை உர உற்பத்திக்காக பெற முடியும் மற்றும் நான் என் மண்புழு  உரத்தை  விற்க வழி இருக்கிறதா?

மண்புழுக்களை பெற மற்றும் உங்கள் மண்புழு உரத்தை விற்பனை செய்ய கீழ் உள்ள முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
திரு. ஆர். ரங்கநாதன், தலைவர்,
எண்: 16, அங்கக விவசாயிகள் சங்கம்,
வணிகர் தெரு,
திருப்போரூர், தமிழ்நாடு- 603 110.
 மின்னஞ்சல்: tedetrust@rediffmail.com
தொலைபேசி: 044-27446369
அலைபேசி: 94433-46369.

என் மண்புழு உரப் பிரிவில்  மண்புழுக்கள் அடிக்கடி இறக்கின்றன. புழுக்கள் இறப்புக்குக் காரணம் என்ன?

அதிக ஈரப்பதம் மற்றும் முறையான காற்றோட்டம் இல்லாத புழுக்கள் இறந்து விடும். அதிகப்படியான நீரை வடிக்க, சரியான வடிகால் வேண்டும். இதனால் மண்புழு கழுவிய அல்லது வடிகட்டிய நீரை தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம்.

என் மண்புழு உர உற்பத்தி பிரிவு பல பூச்சிகளால் தாக்கப்படுகிறது. எப்படி அவைகளைக் கட்டுப்படுத்த முடியும்?

நீங்கள் மண்புழு உற்பத்திப் பிரிவைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும். மேலும் மண்புழு உரத்தை தாக்கும் பூச்சிகளைத் தடுக்க அடிப்பகுதியை சுற்றிலும்  பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும்.

மண்புழு பண்ணை தொடங்கிய சில வாரங்களுக்கு பின்பு, மண்புழுக்கள் கழிவு  பொருட்களை சாப்பிடவில்லை, ஏன்?

முதலில் ஒரு புதிய மண்புழு பண்ணை தொடங்கும் போது, புழுக்கள் தங்கள் புதிய சூழலை பயன்படுத்தி கொள்ள கொஞ்ச காலம் எடுத்து கொள்ளும். மேலும் முதலில் படுக்கையின்  அடியில் உள்ள பொருளை சாப்பிட தொடங்கும். ஆனால் பின்னர் புழுக்கள்  விரைவாக  புதிய உணவு பொருளை நோக்கி செல்லும். இவ்வாறு புழுக்கள் நகரும் போது,  நீங்கள் புதிய கழிவு  பொருட்களை தேவையான  அளவில் சேர்க்க வேண்டும். பின்னர் தொடர்ந்து  கழிவுகளை சேர்க்கலாம்.

நான் எதாவது  தவறாக செய்யும் போது, என் புழுக்கள் தப்பிக்க முயற்சி செய்யும். புழுக்கள் வாழ தகுந்த  சூழ்நிலை அமைய வில்லை என்றால் அவை திரளாக உரக்குவியலை  விட்டு வெளியேற  முயற்சி செய்யும். மண் புழுக்களின் தீவனம், படுக்கையின் ஈரப்பதம்,  படுக்கை பொருளின் அமில கார தன்மை போன்ற காரணத்தினால் மண்புழுக்கள் வெளியேற தொடங்கும். இதே நிலை தொடர்ந்து  நடக்கிறது என்றால், அதற்கு காரணமான பொருட்களை, நீங்கள் திரும்பிச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் விரைவாகவும், எளிதாகவும் பல புழுக்கள் அழியாமல் நடந்து விடும்.

நான் விடுமுறை நாட்களில் இருக்கும் போது, புழுக்கள் பட்டினியால் இறந்து விடுமா?

இல்லை. ஆனால் எந்தப் புதிய உணவுப் பொருளையும் சேர்த்தலைத் தவிர்த்தல் வேண்டும். ஈரமான செய்தித்தாள் அல்லது ஹெஸ்ஸியன் (சாக்கு) கொண்டு படுக்கை மேற்பரப்பு, உலர்ந்து விடாமல் மூடி வைக்க வேண்டும். மட்பாணையில் தண்ணீர்   எடுத்து மூடியை வைத்து மூடி, பாதி தோண்டிய குழி அல்லது தொட்டிகளில் புதைத்து வைக்க வேண்டும். சுற்றியுள்ள பொருட்கள் காய்ந்தாலும் கூட, மண்புழுக்கள் இந்த ஈரமான தொட்டிகளின் கீழே சென்று இருக்கக் கூடும். நீங்கள் நீண்ட நேரம் வெளியூர் போகத் திட்டமிட்டால் (மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட) நீங்கள் விலகி இருக்கும் நேரம், உங்கள் புழுக்களை பார்த்துக்கொள்ள நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி விட்டு செல்லலாம்.

நான் புழுவைப் பாதியாக வெட்டினால் இரண்டு புழுக்கள் கிடைக்குமா?

இல்லை. எனவே உங்கள் படுக்கையைத் திருப்பும் போது, புழுக்கள் துண்டாகாமல்,  மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

எவ்வாறு உள்நாட்டு மண்புழுக்களை சேகரிப்பது?

மண் மேற்பரப்பில் தெரியும் மண்புழு மூலம் மண்புழு வசிக்கும் இடம் எது என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். 20-லிட்டர் தண்ணீரில், 500 கிராம் வெல்லம் (நாட்டு சர்க்கரை) மற்றும் 500 கிராம் புதிய கால்நடை சாணத்தைக் கரைக்க வேண்டும்.1 மீ x 1 மீ. பரப்பில் தெளிக்க வேண்டும். வைக்கோல் கொண்டு மூடி, மாட்டு சாணக் கட்டிகளை விட்டு, ஒரு பழைய சாக்கு பை கொண்டு  மூடி விட வேண்டும். 20-முதல் 30 நாட்கள் வரை தண்ணீர் விடவும். எபிஜீயிக் மற்றும் அநிசிக் நாட்டுப் புழுக்கள் ஒரு கூட்டாக சேகரிக்கப்பட்டு பயன்படுத்த முடியும்.

எவ்வாறான சுற்றுச் சூழ்நிலை புழுக்களுக்கு பிடிக்கும் ?

மண் புழுக்களின் உர சூழ்நிலையானது, அமில-கார தன்மை நடுநிலை, காற்று வெப்பநிலை- 25ºC, காற்று ஈரப்பதம்-70% மற்றும் 70% - 90% மண் ஈரம் கொண்டிருக்க வேண்டும். மண்ணில் பெரிய துகள்கள் இருந்தால், மண் காற்றோட்டமாக இருப்பதை  உறுதி செய்கிறது. அதே போல், மண்ணில் உரமாக்க படாத, நன்கு தூளக்கபட்ட அங்கக உணவு பொருட்கள் இருப்பதையும் இது குறிக்கிறது.

புழுக்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன?

மட்க கூடிய செயலை செய்யும் புழுக்கள் இருபாலினம் கொண்டவை. ஒரு முதிர்ந்த புழு, ஆண் மற்றும் பெண் பாலியல் உறுப்புகளைக் கொண்டு இருக்கும். 55-நாட்களுக்குப்பிறகு, ஒவ்வொரு முதிர்ந்த புழுவும் பாலியல் முதிர்ச்சி அடையும். இனச்சேர்க்கைக்கு பிறகு, ஒவ்வொரு கூட்டு புழு கூட்டிலும் சுற்றுச் சூழ்நிலை மற்றும் உணவை பொறுத்து, மூன்று முதல் இருபது புழுக்கள் இருக்கும்.

மண் புழுக்கள் என்ன பொருட்களை உணவாக எடுத்து  கொள்கின்றன ?

புழுக்கள், ஈரமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் கார்பன் குறைவாக உள்ள  பொருட்களை  உணவாக எடுத்து கொள்ளும். அழுகும் பழங்கள் அல்லது காய்கறிகள், சமையலறை கழிவுகள், சில விலங்குகளின்  எரு, தோட்ட கழிவு மற்றும் உரம், செதுக்கப்பட்ட அட்டைகள் ஆகியவை சிறந்த உணவுகளாகும் . அதிக அமோனியா அல்லது நைட்ரஜன் உள்ள பொருட்கள், கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிக அளவில் உள்ள பொருட்கள், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை புழுக்கள் விரும்பாது.

ஒரு மண் புழு எவ்வளவு சாப்பிட முடியும்?

புழுக்கள், நாள் ஒன்றுக்கு அதன் உடல் எடை அளவு சாப்பிட முடியும் மற்றும் அந்தப்புழுக்களின் வகையைப் பொறுத்தும், புழுக்கள் எடுத்து கொள்ளும் உணவின் தரத்தை பொருத்தும் மற்றும் அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உணவின் அளவு வேறுபடும். மண் புழுக்கள் நுண்ணிய மற்றும் அங்கக பொருட்களை சிதைப்பதற்கு முன்னர் பல பில்லியன் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பாசிகள், பூஞ்சை மற்றும் நூற்புழுக்கள் ஆகியவற்றின் உதவியுடன் அங்கக பொருட்களை மென்மையாக்கி அவற்றை துகள்கள் ஆக்குகின்றன.  புழுக்கள் மூலம் அங்கக பொருளைப் பதப்படுத்த 90 நாட்கள் எடுத்துக்கொண்டு, அறுவடைக்குத் தயாராக இருக்கும்.

மண்புழுக்களின்  முக்கியத்துவம் என்ன?

மண்புழுக்கள், சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கி நீண்ட காலத்திற்கு மண் பாங்குபடுத்தும் பொருட்களாக செயல்படுகின்றன. இவை தாவரங்களுக்கு உடனடியாக கிடைக்கும் சத்துக்களைகொண்டுள்ளன. இதனால் மண் செயல்திறனை பெருமளவு அதிகரித்து, பயிர் விளைச்சலை மேம்படுத்துகின்றன. அறிவியல் ஆராய்ச்சி நடத்திய விளைவுகளின் படி, வேர்மிகாஸ்ட் 30-50% நைட்ரஜன் எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கும், 100% பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கும். மேலும் வேர் நீளம், வேர் எண்ணிக்கை மற்றும் தண்டு நீளம் அதிகரிப்பு, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியில் 40-60% விளைச்சலை அதிகரிக்கும் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவை மண் புழு உரத்தின் நறுமணத்தையும்  (flavour) வாழ்நாளையும் அதிகரிக்கிறது.

0 Comments:

Post a Comment