கருங்கோழி வளர்ப்பில் வெற்றி கண்டு தொழில் முனைவோர் விருது பெற்ற பெண்மணி - Agri Info

Adding Green to your Life

November 14, 2021

கருங்கோழி வளர்ப்பில் வெற்றி கண்டு தொழில் முனைவோர் விருது பெற்ற பெண்மணி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சோழமாதேவி கிராமத்தில் அமைத்துள்ள வேளாண் அறிவியல் மையம் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் கிரீடு தொண்டு நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

இம்மையத்தின் முக்கிய செயல்பாடாக பயிற்சிகள், முதல் நிலை செயல்விளக்கம, வயல்வெளி பரிசோதனை, விதை உற்பத்தி மற்றும் விரிவாக்கப் பணிகளை அரியலூர் மாவட்ட விவசாய பெருமக்களுக்கு செய்து வருகின்றது

ஒவ்வொரு மாதமும் கட்டணப் பயிற்சியாக ஆடுவளர்ப்பு, கறவை  மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய பயிற்சிகளும் மையத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

இதில் நாட்டுக்கோழி வளர்ப்பில் கலந்து கொண்டு பரிசு பெட்ரா பெண்மணிதான் திருமதி, எஸ்.மீனா.

இவர் கோழி வளர்ப்பில் ஈடு படுவதற்கு முன்பு செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின்பு அப்பணியை தொடர முடியவில்லை மற்றும் அதில் மாத ஊதியமும் குறைவாக இருந்த காரணத்தால் வேலையை விடும் நிலைமை ஏற்பட்டது.  பின் வீட்டில் இருந்தே ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன்  நண்பர் ஒருவரின் ஆலோசனை படி வேளாண் அறிவியல் மையம் பற்றி கேள்வி அறிந்து அங்குள்ள தொழிநுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்ட போது நீங்கள் படித்த பெண்மணியாக இருப்பதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுங்கள் மற்றும் அதற்கான பயிற்சி நடைபெறும் தேதியையும் கூறினார்.

கருங்கோழி வளர்ப்பில் வெற்றி கண்ட எஸ்.மீனா

அப்பயிற்சியி கலந்து கொண்டு நாட்டுக்கோழி இரகங்கள், கொட்டகை  அமைப்பு, வளர்ப்பு முறை, தீவன முறை,  நோய் மேலாண்மை, மற்றும்  சந்தைப்படுத்துதல்  வரை விரிவாகக் கற்றுக்கொண்டேன். அவர்களின் ஆலோசனை படி கடக்நாத் என்னும் கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட்டேன்.  முதலில் 20 கடக்நாத்  தாய் கோழிகளை கொண்டு தொழிலினை துவங்கினேன். இதனைத் தொடர்ந்து முட்டை பொரிப்பான் கொண்டு கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்து என்னை போன்ற மகளிருக்கு வழங்கி வருகிறான். இதுவரை 25 பெண்களுக்கு கருங்கோழி குஞ்சுகளை வழங்கி தொழில் முனைவோராக மாற்றியுள்ளேன்.

பிறகு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம்  துவங்கப்பட்ட இளைஞர்கள் குழுவில் சேர்ந்து மாதம் மதம் நடைபெறும் கூட்டத்தில்  கலந்து கொண்டு எனது விற்பனையை அதிகப்படுத்தினேன். கோழி முட்டை ஒன்று ரூ 30/- க்கும், ஒரு நாள் கோழி குஞ்சு ரூ 70/-  எனவும், பெரிய கோழி ஒன்று ரூ 800/- க்கும் விற்பனை செய்து வருகின்றேன். இவ்வாறு தோழி செய்ததன் மூலம் தற்போது தாய்க்கோழி 100  மற்றும் சேவல் 10ம் உள்ளது.

இவற்றினை வைத்து தற்போது முட்டை மற்றும் கோழி விற்பனை மூலம் மாதம் வருமானமாக  ரூ 45,000/- பெற்று வருகிறேன்.

தற்போது வேளாண் அறிவியல் மையத்தின் இளைஞர்கள் குழு மூலம் ரூ 50,000/- கடன் பெற்று கருங்கோழி வளர்ப்பு தொழிலினை மேம்படுத்தியதோடு, காளான் வளர்ப்பு தொழிலை ஆரம்பித்துள்ளேன். காளான் வளர்ப்பில் நாள் ஒன்றுக்கு 2  கிலோ அறுவடை செய்து ரூ 400/- க்கு விற்கிறேன். அதோடு மட்டுமல்ல 2  பெண்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுத்துள்ளேன் என்று கூறியதோடு என்னை ஆளாக்கிய வேளாண் அறிவியல் மையத்திற்கு  நன்றி என்றார்.

தொழில் முனைவோர் விருது

திருமதி எஸ்.மீனா அவர்கள் தற்போது மையத்தில் நடைபெறும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில் பயிற்றுநராக செயல்பட்டு வருகிறார்.  மேலும், கருங்கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதலை பற்றிய விளக்கத்தை அகில இந்திய வானொலி, காரைக்கால் மூலம் விவசாய பெருமக்களுக்கு வழங்கினார்.

இதன் மூலம் இது வரை 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமதி. மீனாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோழிகுஞ்சுகளை பெற்று சுய தொழிலினை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் திருமதி. மீனா அவர்களை கருங்கோழி பண்ணையினை அரியலூர் மாவட்டம் நபார்டு வாங்கி மேலாளர் அவர்கள் வேளாண் இணை இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நடத்தப்பட்ட பண்ணை மகளிர் தினத்தன்று திருமதி, மீனா அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் என்ற விருது, நபார்டு வங்கி மேலாளர் திரு. நவீன்குமார்  மூலம் வழங்கப்பட்டது. எனவே, மகளிர் அனைவரும் மீனாவை போன்று வீட்டிலிருந்து தொழில் செய்து தொழில் முனைவோராகி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

No comments:

Post a Comment