பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த போட்டியாளராக வலம் வந்து கொண்டுள்ளது.
அந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது.
இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் எல்ஐசியின் ஜீவன் ஷிரோமணி திட்டம. இந்த திட்டத்தின் பலன் என்ன? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கும். யாரெல்லாம் இந்த பாலிசியினை எடுக்கலாம்? மற்ற முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
ஜீவன் ஷிரோமணி திட்டம் இந்த ஹெச்என்ஐ (HNI) எனப்படும் அதிக நெட் வொர்த் கொண்டுள்ள தனிநபர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் , பாலிசி காலம் முடிவதற்கு முன்பே பாலிசிதாரர் இருந்தால், பாலிசிதாரருடைய குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற இயலும். பாலிசி காலம் முடியும் போது பாலிசிதாரர் மிக அதிக அளவில் முதிர்வு தொகையை திரும்பிப் பெற இயலும்.
பல்வேறு திட்டங்கள் பங்கு சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டத்தில் 14 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது, 1 கோடி ரூபாய் சம் அஷ்ஷூரன்ஸினை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பாலிசியினை பெற குறைந்தபட்ச வயது 18 வயதாகும். இந்த பாலிசியில் பல திட்டங்கள் உள்ளது.
- 14 ஆண்டு பாலிசியில் 10 மற்றும் 12வது ஆண்டுகளில் 30% காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
- 16 ஆண்டு பாலிசியில் 12 மற்றும் 14வது ஆண்டுகளில் 35% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
- 18 ஆண்டு பாலிசியில் 14 மற்றும் 16வது ஆண்டுகளில் 40% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
- 20 ஆண்டு பாலிசியில் 16 மற்றும் 18வது ஆண்டுகளில் 45% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
கடன் வசதி உண்டா?
பாலிசி காலத்தின் போது, பாலிசியின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் வாடிக்கையாளர் கடனும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த கடன் எல்ஐசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். அவ்வபோது தீர்மானிக்கப்படும் வட்டியின் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படும்.
நிபந்தனைகள் குறைந்தபட்ச வருமானம் ரூ.1 கோடி அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. பாலிசி காலம் 14 வருடங்கள், 16 வருடங்கள், 18 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் ஆகும்.
ப்ரீமியம் செலுத்தும் காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. ஒருவர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்கும் பட்சத்தில் இந்த பாலிசியை எடுக்க இயலும்.
இந்த பாலிசியை எடுக்க அதிகபட்ச வயது வரம்பு 55 (14 வருட பாலிசிக்கு), 51 வயது (16 வருட பாலிசிக்கு), 48 வயது (18 வருட பாலிசிக்கு), 45 வயது (20 வருட பாலிசிக்கு)
No comments:
Post a Comment