எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்கள் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.
எந்த மாதிரியான மூலிகை செடிகளை எப்படி உங்கள் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
துளசி :
துளசி மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம். இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன. ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளிசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்த ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் அமைகிறது. துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளிசியின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது. சீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் செயல்படுகிறது. சுத்தமான துளசி இலைகளை மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
வெந்தயம்:
வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இந்த அற்புதமான மூலிகை செடியை வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம்.
லெமன் கிராஸ்:
லெமன் கிராஸ் மற்றொரு மூலிகை செடியாகும். இதையும் வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம். சின்ன ஒரு ஜாடியில் கூட எளிதாக இதை வளர்க்கலாம். இது எண்ணிலடங்காத மருத்துவ பயன்களை அள்ளித் தருகிறது. இது டீ, சாலட்ஸ், சூப், மற்றும் நிறைய சமையல் வகைகளில் பயன்படுகிறது. இந்த லெமன் கிராஸ் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள ஆன்டி பைரிடிக் பொருள் அதிகமான காய்ச்சலை கூட குணப்படுத்தி விடுகின்றது. மூச்சுப் பிரச்சினை மற்றும் தொண்டை புண் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. மேலும் இது எல்லா விதமான வலிகளான அடி வயிற்றில் வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, சீரண மண்டல கோளாறுகள், தசை சுருக்கம், வயிற்று வலி போன்றவற்றிற்கும் பயன்படுகிறது
பாசில்:
ஒரு சிறிய பூந் தொட்டியில் கூட பாசிலை வளர்க்க முடியும். இதுவும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். நிறைய மக்கள் இதை சமையலில் பயன்படுத்துகின்றனர். தாய் குஷைன் போன்ற உணவு வகைகளில் பயன்படுத்துகின்றனர். மேலும் சாலட், சூப் மற்றும் மற்ற ரெசிபிகளிலும் பயன்படுகின்றனர். இது துளசி செடியிலிருந்து வித்தியாசமான ஒன்றாகும். இது ஸ்வீட் பாசில் என்று அழைக்கப்படுகிறது. வயிற்றில் உள்ள கேஸ் மற்றும் வயிறு மந்தம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. பசியின்மைக்கு மருந்தாக பயன்படுகிறது. வெட்டு பட்ட காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
கற்றாழை:
கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது எங்கு வேணும்னாலும் வளரும். நன்றாக வளர்வதற்கு சூரிய ஒளி தேவை. இது கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும். இதை உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது. இது வெளி மற்றும் உள் என்ற இரண்டு பயன்பாட்டிற்கும் பயன்படுகிறது. இது நல்ல நீர்ச்சத்தை கொடுக்கக்கூடிய மூலிகையாக உள்ளது., இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அலற்சியை எதிர்க்கிறது. மேலும் உங்கள் சருமம் மற்றும் தலை முடிகளை பாதுகாக்கிறது. இந்த கற்றாழை ஜூஸை குடித்தால் பசியின்மை, சீரண சக்தி கோளாறுகள், மலச்சிக்கல், குடல் அல்சர் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
புதினா :
இந்த மூலிகை செடி உலகளவில் எல்லாராலும் வளர்க்கப்படும் முக்கிய செடியாகும். ஒரு சிறிய தொட்டியில் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய இவற்றை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இதில் இயற்கையாகவே மக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இதன் இலைகளிருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகளுக்கு ரிலாக்ஸ் கொடுக்க பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. மேலும் வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், எரிச்சலுடன் மலம் கழித்தல், பெருங்குடல் பிரச்சினை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. நமது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினை தடுக்கிறது.
வல்லாரை கீரை:
மற்றொரு வீட்டிலேயே வளர்க்க கூடிய ஈஸியான செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகும். இந்த சின்ன மூலிகை செடி அல்சர், சரும பாதிப்பு, இரத்த குழாய் சுருக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது. நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க நினைத்தால் இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே போதும். இதன் இலைகளை கசக்கி பிழிந்த சாறு வெளியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டல சீரான இயக்கத்திற்கு பயன்படுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
அஸ்வகந்தா:
அஸ்வகந்தா முந்தைய கால ஆயுர்வேத முறைகளிலிருந்து பயன்படுத்தப்படும் மூலிகை செடியாகும். இதை வீட்டிலேயே வளர்க்கலாம். இது மன அழுத்தம் குறைப்பதற்கும் மற்றும் நரம்பு மண்டல பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது. இந்த பழைய மூலிகை செடி கருவுறுதல், காயங்களை குணப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதய இயக்கத்திற்கு டானிக்காக செயல்படுகிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைத்து கவலைகள், அனிஸ்சிட்டி போன்றவை வராமலும் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல் போன்ற அற்புதமான பலன்களை அள்ளித் தருகிறது.
வேப்பிலை:
இது மிகவும் பழங்கால மருத்துவ குணம் வாய்ந்த தாவரமாகும். இது ஒரு மரமாக வளரக் கூடியது. இருப்பினும் வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கியமான மரமாகும். உங்களுக்கு போதுமான இட வசதி இல்லாவிட்டாலும் ஒரு தொட்டியிலும் இதை வளர்த்து கொள்ளலாம். இதில் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இது உள் மற்றும் வெளி பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. இதன் இலை சாறு மற்றும் எண்ணெய் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
லெமன் பாம்:
வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றொரு தாவரம் லெமன் பாம் ஆகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு லெமன் மர இலைகளை போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இதன் இலைகளை கசக்கி அதன் சாற்றை உடம்பில் தேய்த்து கொண்டால் இயற்கை கொசு விரட்டியாக செயல்படும். தொண்டை புண், சலதோஷம், காய்ச்சல், தலைவலி, மன அழுத்தம், சீரண மண்டல பிரச்சினைகள் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment