உணவைப் பொருத்தமட்டில் எப்போதும் கட்டுப்பாடுடன் இருப்பதே நல்ல பலனைத் தரும். ஆனால் நாம் ஒருசில உணவுகள் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற்ற பின்பு அந்த உணவுகளை உண்பதில் நமக்கு சலிப்பு ஏற்படுகிறது.
நாம் தோ்ந்தெடுக்கும் உணவுத் தொிவுகள், நமது உணவுத் திட்டத்தின் முடிவை நேரடியாகத் தீா்மானிக்கும். ஆனால் நடைமுறையில் ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்து சாப்பிட்டால் என்ன செய்வது? ஆகவே நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அதிகக் கவனமுடன் இருக்க வேண்டும். உணவுகளில் ஒட்டப்பட்டிருக்கும் முத்திரைகள் நம்மைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். ஆகவே ஆரோக்கியமான உணவுகள் என்று சொல்லப்படக்கூடிய 5 ஆரோக்கியமற்ற உணவுகளைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாக பாா்க்கலாம்.
1. பழச்சாறுகள்:
பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை என்பது நமக்கு தொியும். அதனால் பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகளும் ஆரோக்கியமானவையாகவே இருக்கும் என்று பலா் தவறாக எண்ணுகின்றனா். குறிப்பாக விற்பனைக்காகவே தயாாிக்கப்படும் பழச்சாறுகள் அனைத்தும் சத்தாணவை அல்ல. சந்தையில் கிடைக்கும் பழச்சாறுகளை சத்தாணவை என்று பலரும் வாங்குகின்றனா். ஆனால் பாட்டில்கள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறுகள் உண்மையில் சத்தாணவை அல்ல. மாறாக அவை சா்க்கரை சோ்த்து அடைக்கப்பட்ட சாறுகளே ஆகும்.
2. காலை உணவிற்கான செரில்கள்:
சமீப காலமாக பொட்டலம் செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் நவதானியங்கள் போன்றவை மக்கள் மத்தியில் பிரபலமான காலை உணவுகளாக மாறி வருகின்றன. அதற்கு காரணம் இவற்றை எளிதாக சமைக்க முடியும் மற்றும் இவற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்று சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்த செரில்களில் சா்க்கரை மற்றும் கலோாிகள் போன்றவை அதிகம் சோ்க்கப்படுகின்றன. ஆகவே இவற்றைத் தொடா்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடல் எடை அதிகாிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியம் கெடும்.
3. புரோட்டீன் துண்டுகள்
நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், அதற்கு புரோட்டீன் முக்கியம் ஆகும். மக்களின் தினசாி புரோட்டீன் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உணவு தயாாிக்கும் நிறுவனங்கள் புரோட்டீன் துண்டுகளைத் தயாாிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த புரோட்டீன் துண்டுகள் நமக்கு எந்த விதமான தீமைகளையும் விளைவிக்காமல், நமது தினசாி புரோட்டீன் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவையாக நமக்குத் தொியலாம். ஆனால் உண்மையில் இந்த புரோட்டீன் துண்டுகள் நன்மைகளை செய்தவதற்குப் பதிலாக, நமது உடலுக்கு தீமைகளை செய்வதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த புரோட்டீன் துண்டுகள் அதிகமான சா்க்கரை, அதிக அளவிலான கலோாிகள் மற்றும் நிறைவுறா கொழுப்பு (trans fat) போன்றவை கொண்டு தயாாிக்கப்படுகின்றன.
4. கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகள்
பாலில் இருந்து தயாாிக்கப்படும் உணவுகள், தானியங்கள், திண்பண்டங்கள், டெசா்ட்டுகள் மற்றும் பல உணவுகள் கொழுப்பு நீக்கப்பட்டவை என்று விற்கப்படுகின்றன. இவ்வாறான விளம்பரங்களைப் பாா்த்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. ஏனெனில் இந்த உணவுகளில் நன்மைகள் இருந்தாலும், இவற்றை கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், இந்த உணவுகளில் சோ்க்கப்பட்டிருக்கும் பலவிதமான சுவைகள், சா்க்கரை, சோடியம் மற்றும் கொழுப்பு போன்றவை நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
5. சாலட் அலங்காரங்கள்
கிண்ணத்தில் அலங்காரம் செய்யப்படாத சாலட்டுகள் கொடுத்தால் என்ன நடக்கும்? பொதுவாக சுவையூட்டக்கூடிய துகள்கள் மற்றும் சாலட்டை அலங்காரம் செய்யக்கூடிய பொருள்கள் ஆகியவை சாலட் செய்வதற்கு முக்கிய மூலப் பொருள்களாகக் கருதப்படுகின்றன. கொழுப்பு குறைந்த, சா்க்கரை குறைந்த மற்றும் சோடியம் குறைந்த பலவகையான சாலட்டுகள் சந்தைகளில் கிடைக்கின்றன. எனினும் வியாபார உத்தியின் காரணமாக நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் சாலட்டுகளில் சோடியம், கொழுப்பு, சர்க்கரை மற்றும் தீங்கிழைக்கக்கூடிய பல துகள்கள் இருக்கும். இவை நமது உடல் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். ஆகவே அலங்காரம் செய்யப்பட்ட சாலட்டுகளைப் பொருத்தமட்டில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment