Search

நுரையீரலை வலுப்படுத்த சுவாசப் பயிற்சிகள் !! மழை காலம், குளிர்காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

 குளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை, யோகா, மூச்சுப்பயிற்சி செய்துவிடுங்கள். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.

பிராணயாமா என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

பிராணயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.


உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிராணயாமாவால் கிடைக்கும் உடல் நல பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்

பிராணயாமா பயிற்சியால் கிடைக்கும் உடல் நல பயன்களில் சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடுவதும் முக்கியமான ஒரு பயனாகும். சைனஸ் பிரச்சனையை தவிர்க்க அல்லது சிகிச்சை அளிக்க பாஸ்ட்ரிகா என்ற பிராணயாமா வழிமுறையை பயிற்சி செய்யுங்கள். அதனை முயற்சி செய்து உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியில் அடைக்கவும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.


பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

பின் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக இழுக்கவும். உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து, வலது நாசியில் மூச்சை மெதுவாக இழுத்து உடன் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.




0 Comments:

Post a Comment