ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1 பிஏ.2 பிஏ.3 என 3 வகையாக மாறுகிறது- மருத்துவ நிபுணர்கள் தகவல் - Agri Info

Adding Green to your Life

January 9, 2022

ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1 பிஏ.2 பிஏ.3 என 3 வகையாக மாறுகிறது- மருத்துவ நிபுணர்கள் தகவல்

 ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் (பி.1.1.529) கடந்த மாதம் 2-ந் தேதி இந்தியாவுக்கு பரவியது.



கர்நாடக மாநிலத்தில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியது.

தற்போது இந்தியாவில் ஒமைக்ரானின் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பின் உயிரி தொழில்நுட்பத் துறையினர் ஒமைக்ரான் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை விவரங்களை பரிசோதித்தனர்.

இந்த ஆய்வின்படி ஒமைக்ரான் வைரஸ் 3 வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் தற்போது 3 வகையாக மாறி வருகிறது. பிஏ.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 என 3 வழித் தோன்றல்களை கொண்டு இருக்கிறது.

இதில் பிஏ.1 குறைந்த வீரியம் மிக்கது. மிகவும் அதிகமாக பரவக்கூடியது. இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

பிஏ.1 மற்றும் பிஏ.3 ஸ்பைக் புரதத்தில் 60 முதல் 70 சதவீதம் நீக்கம் உள்ளது. பிஏ.2வில் ஸ்பைக் புரதத்தில் 69-70 சதவீதம் நீக்கம் இல்லை. ஆர்.டி.-பி.சி.ஆர் மற்றும் எஸ்.ஜி.டி.எப். கிட் இந்தியாவில் ஆரம்பகால ஒமைக்ரான் கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.3 மாற்றத்தை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்


அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்


சாதாரண சளியா? ஒமைக்ரானா? வித்தியாசம் என்ன? அறிகுறிகள் சொல்வதென்ன?

No comments:

Post a Comment