நமது ஆயுட்காலம் முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது உணவு பட்டியலில் சில முக்கிய உணவு வகைகளை சேர்க்க வேண்டும். இதுகுறித்து விளக்கிய டாக்டர் இர்பான் ஷேக், ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக், மூளை வளர்ச்சி, தசை, எலும்பு ஆரோக்கியம் போன்ற அனைத்து வகையான உடல்நலத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். நமது ஆயுட்காலம் முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது உணவு பட்டியலில் சில முக்கிய உணவு வகைகளை சேர்க்க வேண்டும். இதுகுறித்து விளக்கிய டாக்டர் இர்பான் ஷேக், ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் கூறிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவை நிறைந்துள்ள உணவு வகைகள் குறித்து நாம் இங்கு காண்போம்.
புரதம் :
தசைகள், எலும்புகள், ஹார்மோன்கள், ஆன்டிபாடிகள் போன்ற உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புரதச்சத்து அவசியமானது. ஒரு நாளைக்கு 0.8 கிராம் முதல் 1 கிலோ வரை புரதத்தை உட்கொள்வது தசையை வலுவடைய உதவுகிறது. புரதச்சத்தானது முட்டையில் மட்டுமின்றி கொண்டைக்கடலை, பாலாடைக்கட்டி, குயினோவா, தயிர், வேர்க்கடலை, பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் பாதாம் போன்ற உணவுகளும் அதிகமாக காணப்படுகிறது.
DHA ஒமேகா-3 :
முக்கியமாக கடல் உணவுகளில் அதிகமாக காணப்படும் இந்த DHA ஒமேகா-3 தனித்துவமான கொழுப்பு சத்து நமது மூளைக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கண்பார்வையை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. கொழுப்பு நிறைந்த மீன் ஒமேகா 3ன் சிறந்த ஆதாரமாகும். ஒமேகா-3 நிறைந்த காய்கறிகள், கொட்டைகள் மற்றும் சீட்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். சைவ உணவு பிரியர்கள் கடற்பாசி, நோரி, ஸ்பைருலினா மற்றும் குளோரெல்லா போன்றவற்றையும் எடுத்து கொள்ளுங்கள்.
கோலின் :
கோலின் (Choline) நீரில் கரையக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். நமது மூளை, நரம்பு மண்டலம், நினைவகம், மனநிலை மற்றும் தசை ஆரோக்கியம் போன்றவை கோலினை சார்ந்துள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை போதுமான அளவு உட்கொள்வதில்லை, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு கூடுதல் கோலின் எடுத்து கொள்ள வேண்டும். கோலினின் இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற விலங்கு அடிப்படையிலான உணவில் அதிகமாக காணப்படுகிறது.
கால்சியம் :
எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் கால்சியம் நிறைந்த உணவு ஆதாரங்கள் ஆகும். இது தவிர கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றிலும் கால்சியம் நிறைந்துள்ளது.
வைட்டமின் டி :
வைட்டமின் டி நம் உடல்கள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து நம்மால் வைட்டமின் டி-யை இயற்கையாயாக பெற முடியும். இதனால் வைட்டமின் டி 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது.கொழுப்பு நிறைந்த மீன், கல்லீரல், முட்டையின் மஞ்சள் க, ஆரஞ்சு சாறு மற்றும் சீஸ் போன்ற உணவு வகைகளிலும் இயற்கையாகவே வைட்டமின் டி நிறைந்துள்ளது.
துத்தநாகம் :
துத்தநாகம் சரியான வளர்ச்சிக்கு முக்கியமானது, குறிப்பாக குழந்தை பருவம், இளமை பருவம் மற்றும் கர்ப்ப காலத்தில் துத்தநாகத் தை சரியான அளவு எடுத்து கொள்ள வேண்டும். மேலும் துத்தநாகம் காயங்களை விரைவாக ஆற்றவும் உதவுகிறது. சிவப்பு இறைச்சியில் துத்தநாகம் நிறைந்துள்ளது. சைவ உணவு உண்பவர்கள் கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
செலினியம் :
ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க செலினியம் ஒரு ஆக்ஸிஜனேற்ற ஊட்டச்சமாக செயல்படுகிறது. உங்கள் தினசரி தேவைகளில் 11 சதவீதம் செலினியம் பால் மற்றும் தயிரில் உள்ளது. இது தவிர வாழைப்பழம், முந்திரி, பருப்பு, கீரை போன்றவற்றிலும் செலினியம் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஏ :
"ஆன்டி-இன்ஃபெக்டிவ் வைட்டமின்" என்று அழைக்கப்படும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து தோல், வாய், வயிறு மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. உருளைக்கிழங்கு, பூசணி, கேரட் மற்றும் கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதி செய்கிறது. வைட்டமின் ஈ பெரும்பாலான உணவுகளில் காணப்படும் பொதுவான ஊட்டச்சத்து ஆகும். சமையல் எண்ணெய்கள், சீட்ஸ் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.
வைட்டமின் சி :
உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாக வைட்டமின் சி செயல்படுகிறது. இது உணவுகளில் இருந்து அதிக இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுவதால் இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும் கிவி, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி, தக்காளி, காலிஃபிளவர் மற்றும் சிவப்பு மிளகாயிலும் வைட்டமின் சி உள்ளது.
திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் :
செல்கள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அவசியம். இது நமது udalil உள்ள கழிவுப்பொருட்களை அகற்றவும், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்ட திரவங்களை உட்கொள்வது நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
இளநீர், தர்பூசணி, கீரை, காய்கறிகள், வாழைப்பழம் போன்ற பழங்கள், கொடிமுந்திரி உட்பட எலக்ட்ரோலைட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். இது தவிர, பீன்ஸ், பருப்பு, பயறு வகைகள் ஆகியவற்றிலும் கணிசமான அளவு எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.
No comments:
Post a Comment