பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வி மற்றும் ஜியோ தங்களின் பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தின. அனைத்து சலுகை கட்டணங்களும் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.
இதன்காரணமாக பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற துவங்கினர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை விளம்பர நோக்கில் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஏர்டெல், ஜியோ மற்றும் வி நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் போது 5 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சலுகை 30 நாட்கள் அல்லது சலுகை தற்போதைய சலுகையின் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு ஜனவரி 15, 2022 முன் போர்ட் செய்ய வேண்டும்.
பின் இலவச 5 ஜி.பி. டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியதற்கான காரணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உடன் #SwitchToBSNL ஹேஷ்டேக் சேர்த்து பின் பி.எஸ்.என்.எல். அக்கவுண்டை டேக் செய்ய வேண்டும். இத்துடன் பி.எஸ்.என்.எல். சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்ந்து, இதற்கான ஆதாரத்தை பி.எஸ்.என்.எல். வாட்ஸ்அப் எண் - 9457086024 அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment