Search

60 மாதங்களில் ரூ.10- ரூ.14 லட்சம்.. வரி சலுகையும் உண்டு.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் தான் சிறந்தது..!

 இந்தியாவினை பொறுத்த வரையில் என்ன தான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.

இது மிக பாதுகாப்பான திட்டம் என்பதோடு மட்டும் அல்லாமல், பங்கு சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரியளவில் லாபம் இல்லாவிட்டாலும், கணிசமாக நிலையான வருமானம் தரக்கூடிய திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 60 மாதங்களில் 10 - 14 லட்சம் ரூபாய் வரையில் லாபம் கொடுக்க கூடிய ஒரு திட்டத்தினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். அப்படி என்ன திட்டம் இது? இதில் யாரெல்லாம் இணையலாம்? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

என்ன திட்டம்? நாம் இன்று பார்க்க கூடிய திட்டம் அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திரமாகும் (National Savings Certificates - NSC). இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் பெற்றுக் கோள்ள முடியும். இன்றும் நிலையான வருமானம் தரக்கூடிய அசத்தலான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது 5 வருட திட்டமாகும். முழுக்க சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

வரிச்சலுகை உண்டு நிலையான வருமானம் தரக்கூடிய திட்டம் என்றாலும் இந்த திட்டத்தில் வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வரி சலுகை அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நுழைய 18 வயது குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதிர்வு வயது 60 வயதாகும். இதில் குறைந்தபட்ச முதலீடு என்பது டயர் 1 நகரங்களில் 500 ரூபாயாகும். இதே டயர் 2 நகரங்களில் 250 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை.

வட்டி விகிதம் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.8% ஆகும். உதாரணத்திற்கு 1,000 ரூபாய்க்கு இந்த பத்திரத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1,389 ரூபாயாக உள்ளது. இதில் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகையும் உண்டு. எனினும் முதிர்வின் போது கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். இதில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை.

முன் கூட்டியே திரும்ப பெறுதல் இந்த திட்டத்தில் தனி நபர்கள் முன் கூட்டியே திரும்ப பெற முடியாது. இதே ஜாய்ண்ட் ஆக்கவுண்டாக வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இறந்து விட்டால், அல்லது நீதிமன்ற உத்தவின் பேரில் இடையில் முடித்துக் கொள்ளலாம். இதனை ஓராண்டுக்குள் எடுத்தால் முகமதிப்பு மட்டுமே செலுத்தப்படும். இதே ஒரு வருடத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் முடித்துக் கொண்டால், சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி மட்டுமே வழங்கப்படும். இதே முன்று வருடத்திற்கு பிறகு தள்ளுபடி மதிப்பில் விற்பனை செய்து கொள்ளலாம்.

ரூ.10 - 14 லட்சம் எப்படி? இன்றைய வட்டி விகித நிலவரப்படி 10 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால், அது 5 வருடம் கழித்து 13.89 இதே 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடம் கழித்து 6,94,746 ரூபாயாக உங்கள் முதிர்வு தொகை இருக்கும். இதே 11 லட்சம் ரூபாய் முதலீடு எனில், ஐந்து வருடங்களுக்கு பிறகு, 15.28 லட்சம் ரூபாய் முதிர்வாக கிடைக்கும்.

0 Comments:

Post a Comment