தினமும் ரூ8 முதலீடு… ரூ17 லட்சம் ரிட்டன்; எல்ஐசியின் சூப்பர் பாலிசி - Agri Info

Adding Green to your Life

January 9, 2022

தினமும் ரூ8 முதலீடு… ரூ17 லட்சம் ரிட்டன்; எல்ஐசியின் சூப்பர் பாலிசி

 

இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் உங்களுக்கு கிடைக்கிறது.




இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC),காப்பீடு உள்பட ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பிரீமியங்கள் முதிர்வு காலத்திற்குப் பிறகு பெரிய வருமானத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஓய்வு மற்றும் முதுமைக்கு நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க விரும்பினால், எல்ஐசி பாலிசிகள் உங்களுக்கு சிறந்த வழி.

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட எல்ஐசியில், நிச்சயம் உங்களது குடும்ப உறுப்பினரோ அல்லது உறவினர்களோ பாலிசி எடுத்திருப்பார்கள். ஒருவேளை, நீங்கள் இன்னும் எல்ஐசி பாலிசையை எடுக்காவிட்டால், தினமும் வெறும் 8 ரூபாய் செலுத்தி, ரூ.17 லட்சம் வருமானம் கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம் நிச்சயம் சிறந்த சேமிப்புக்கான வழியாகும்.

எல்ஐசி ஜீவன் லாப் என்பது என்டௌமெண்ட் திட்டத்துடன் இணைக்கப்படாமல் வெளி வரும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டம் பங்குகளை சார்ந்து இருக்காது என்பதால், பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

நீங்கள் மாதத்திற்கு ரூ. 233 முதலீடு செய்வதன் மூலம் முதிர்ச்சி காலத்தில் ரூ.17 லட்சத்தை பெறலாம், அதாவது ஒரு நாளைக்கு ரூ.8க்கும் குறைவாக தான் முதலீடு தொகை இருக்கிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீட்டு வயது எட்டு மட்டுமே. அதன்படி, உங்கள் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தை தாராளமாக தொடங்கலாம். அதே சமயம், இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வயது 59 ஆகும்.

இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் காப்பீட்டு உரிமையை தேர்வு செய்ய உங்களுக்கு அனுமதி கொடுக்கிறது.

அதாவது, ஒருவர் பாலிசி காலத்தை 21 வருடங்கள் தேர்வு செய்தால், பாலிசி எடுக்கும் போது அவரது வயது 54 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பாலிசி காலமாக 25 வருடத்தை தேர்வு செய்தால், தனிநபரின் வயது வரம்பு 50 ஆண்டுகள் ஆகும்.

பாலிசி கால வரையின் போது எந்த நேரத்திலும் பாலிசிதாரரின் இறப்பு ஏற்பட்டால், நியமனதாரருக்கு இறப்பு சலுகைகளானது வழங்கப்படும். நாமினி போனஸ் மற்றும் காப்பீட்டுத் தொகையின் பலனைப் பெறுகிறார். இந்த திட்டத்தில் வரி விலக்கும் பெறலாம்.

ரூ.1 கோடி கிடைக்கும் - எல்ஐசியின் ஜீவன் சிரோமணி பிளான் !!!

ஆன்லைனிலேயே PPF , SSY போன்ற அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம்

60 மாதங்களில் ரூ.10- ரூ.14 லட்சம்.. வரி சலுகையும் உண்டு.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் தான் சிறந்தது..!


No comments:

Post a Comment