நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர். உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர்; அது விளையாடும் இடத்திலோ, 1 பள்ளியிலோ அல்லது வீட்டில் கூட இருக்கலாம். உங்களது குழந்தைகள் போகும் அனைத்து இடத்தையும் நீங்கள் கிருமிநீக்கம் செய்ய முடியாது, ஆதேபோல் உங்களது குழந்தைகள் வெளியே போய் விளையாடுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், பெற்றோராக, நீங்கள் தொற்றுகள் மற்றும் ஒருசில நோய்களின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்? குழந்தைகள் இயற்கையாகவே பலமுள்ள நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வது ஒரு முறையாகும். அதனால், உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.
நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.
நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.
No comments:
Post a Comment