தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில தற்போதுவரை உலகம் முழுவதும் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்க 30 கோடியை கடந்துள்ள நிலையில், பல நாடுகளி்ல் கொரோனா தொற்றின் 4-வது மற்றும் 5-வது அலை பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஆண்டு இறுதியில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்ந நவம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பி்ன்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்ற நாட்களில் இரவு நேர ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து அரவு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில். தற்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, காய்ச்சல் சளி மற்றும் உடல் வலி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் இணை நோய்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதிற்கு குறைவாக இருந்தாலும் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனை அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment