Search

Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்

 உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால் தான், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம்.



உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம் 

சிலருக்கு ஞாபக சக்தி மிக குறைவாக இருக்கும், அவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
 
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. உங்கள் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல உணவை உட்கொள்வது அவசியம். எனவே, ஒவ்வொருவரும் தங்கள் உணவில் ஏராளமான பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதோடு, சால்மன் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அடர் பச்சை இலை காய்கறிகள் மூளைக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன. கூடுதலாக கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவையும் மூளைக்கான சிறந்த உணவுகள்.

ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த 5 சூப்பர் உணவுகளை உண்ணுங்கள்:

வாதுமை கொட்டை (Walnut) :
பார்ப்பதற்கு மூளை போலவே தோற்றமளிக்கும் வாதுமை கொட்டை, உண்மையிலேயே மூளைக்கு சூப்பர்ஃபுட் ஆகும். இது மூளைக்கு பல வழிகளில் பயனளிக்கும். வாதுமை கொட்டையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலம்), பாலிபினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. ஒமேகா -3 (Omega-3) கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதால், மூளைக்கு தேவையான முக்கிய உணவாகக் கருதப்படுகின்றன.

மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. வைட்டமின் பி 6, ஈ, துத்தநாகம் மற்றும் அதில் காணப்படும் புரதங்கள் நரம்பியக்கடத்தி இரசாயனத்தை உருவாக்குகின்றன. இது மூளை சுறுப்பாக இயங்கவும், நினைவாற்றலை பெருக்கவும் உதவுகிறது. 

ஆளிவிதை மற்றும் பூசணி விதைகள் (Flaxseed and Pumpkin Seeds):

மூளை ஆரோக்கியத்திற்கு பூசணி மற்றும் ஆளிவிதை சிறந்தவை. இந்த விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன, இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

முந்திரி (Cashew) :

முந்திரி ஒரு நல்ல மெமரி பூஸ்டர். இதில் பாலி-சாசுரேடட் மற்றும் மோனோ-சாசுரேடட் (poly-saturated and mono-saturated) கொழுப்புகள் உள்ளன.  அவை மூளை செல்கள் உற்பத்திக்கு மிகவும் முக்கியம். இதனால் மூளை ஆற்றல் அதிகரிக்கும்.

கொட்டை வகைகள்:

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், கொட்டைகள் உட்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துதோடு, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது என்கிறார். இதனுடன் கவனச்சிதறலை போக்கி, மனதை ஒருமுகபடுத்துகிறது. கொட்டைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதில் வைட்டமின் கே, ஏ, சி, பி 6, ஈ, கால்சியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளன. அவை உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்.

 உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 11 வகையான ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

நீங்கள் நன்றாக சுவாசிக்க உதவும் 10 உணவுகள் !!! | ஆரோக்கியமான நுரையீரலுக்கான உணவு

உங்கள் ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு இந்த 7 உணவுகளை சாப்பிடுங்கள் !!



0 Comments:

Post a Comment