Hypertension: உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வாகும் ‘5’ சூப்பர் உணவுகள்! - Agri Info

Adding Green to your Life

January 11, 2022

Hypertension: உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வாகும் ‘5’ சூப்பர் உணவுகள்!

 உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ​​ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

                                    
வாழ்க்கை முறை காரணமாக ஒதுவாக பலருக்கு உள்ள நோய்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ​​ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

துரிதமான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் உள்ளனர். மன அழுத்தத்தை தொற்றுநோய் பரவல் பீதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்ன் காரணமாக பதற்றம், கோபம், மன சோர்வு ஆகிஒயவை ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தில், இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்தின் போது, இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இது காலப்போக்கில் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று பெங்களூரு அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ஷரண்யா எஸ் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

வழக்கமான தலைவலி, மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகளாகும் என்று நிபுணர் கூறுகிறார்.

தினசரி உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை திறமையாக கட்டுபடுத்த உதவும். ஏனெனில் இந்த உணவுகளில் மருத்துவ குணங்களால், உயர் இரத்த அழுத்தத்திற்கான சூப்பர் உணவுகள் என இவற்றை கூறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்:

1. மாதுளை

இந்த சுவையான பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் உள்ளன. இதனால் உயர் இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. காலை சிற்றுண்டியின் ஒரு கிண்ணம் மாதுளை நல்ல பலனைத் தரும்.

2. நாவல் பழம்

உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்கள் சுருங்கும் நிலையை ஏற்படுத்தும். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது மிகவும் தசைகளுக்கு நல்லது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அதிசய பழம்  என்பதாடு, இந்த நாவல் பழம் அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் மிகச் சிறந்தது.

3. பீட்ரூட்

பீட்ரூட்டில், இயற்கை நைட்ரேட்டுகள் இருப்பதால், ஒலிம்பியன்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருந்து வருகிறது. ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு அல்லது சமைத்த சைவ உணவான பீட்ரூட் உண்ணும் போது,  அதனால்,  2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவு கணிசமாக குறையும் என்கின்றனர் வல்லுநர்கள்.

4. பூண்டு

பூண்டு அல்லிசின் என்ற இயற்கை கலவையை உற்பத்தி செய்வதால் பூண்டு பல ஆண்டுகளாக மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் என்பதால்,  உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஒரு அத்தியாவசிய பொருள் எனலாம்.

5. வெந்தயம்

வெந்தயம் மற்றும் வெந்தய கீரை இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன, மேலும் அவை உடலில் LDL/TG அளவைக் குறைக்கின்றன, இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைகிறது. எனவே உங்கள் உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை நிச்சயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதாலும், தினசரி மிதமான உடற்பயிற்சியினாலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அதோடு நல்ல தூக்கமும் அவசியம்

இந்த தொற்றுநோய் கடந்து போகும் வரை நாம், ​​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment