நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
Omicron symptoms: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்திற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான, ஒமிக்ரான், உலகம் முழுவதையும் மூழ்கடித்தது. முன்பு காணப்படாத அறிகுறிகளை Omicron இல் காண்கிறது. ஒமிக்ரானின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டால், அதைக் கட்டுப்படுத்துவது எளிது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய சில அறிகுறிகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு கூறயுள்ளோம்.
1. நீலம் மற்றும் சாம்பல் நிற நகங்கள்: இது ஒமிக்ரானின் (Omicron) ஆரம்ப அறிகுறிகளில் காணப்படுகிறது. ஒமிக்ரானால் (Symptoms of Omicron) பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் நகங்கள் நீலமாக மாறத் தொடங்கும். இதுபோன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டால், மருத்துவரை அணுகவும்.
2. தோலில் ஏற்படும் விளைவு: உங்கள் தோலில் திடீர் புள்ளிகள் இருந்தால் அல்லது தோல், உதடுகள் நீல நிறமாக மாறினால், நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
3. சுவாசிப்பதில் சிரமம்: திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, மார்பு இறுக்கமாக உணர்ந்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
4. சோர்வு மற்றும் உடல் வலி: நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது இடுப்பின் கீழ் பகுதியில் தாங்க முடியாத வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். இது Omicron இன் முக்கிய அறிகுறிகளாகும்.
5. இரவில் வியர்த்தால்: இரவில் தூங்கும் போது அதிகளவில் வியர்த்தால், இதுவும் ஒமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம்.
No comments:
Post a Comment