சமீப காலமாக முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். எனினும் முதலீடு செய்யும் போது அது பாதுகாப்பானதா? லாபகரமானதா? என்பதையும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சம்பாதித்த பணத்தை சேமிப்பதே கடினம். அதனை சரியான வழியில் செய்யாவிட்டால், பின் முதலீட்டினை இழந்து கஷ்டப்பட நேரிடும்.
இதனாலேயே இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அஞ்சலக திட்டங்களையே விரும்புகின்றனர். இது பாதுகாப்பானது. நம்பிக்கையானது. கணிசமான வருவாயினை கொண்டது. போதாக்குறைக்கு பல திட்டங்களில் வரிச்சலுகையும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகளை போலவே, அஞ்சலகத்திலும் பல சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
முதலீடு ஆன்லைனில் செய்ய முடியுமா?
தற்போது நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. பல மாநிலங்களில் ஏற்கனவே கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆக இந்த காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து ஏதேனும் பாதுகாப்பான முதலீடினை செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக அஞ்சலக திட்டங்களில் வீட்டில் இருந்து முதலீடு செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கணக்கினை ஆன்லைனில் தொடங்கலாமா? மேலும் ஆன்லைனிலேயே வங்கிகளில் பணம் பரிமாற்றம் செய்வது போல, அஞ்சலக கணக்கில் இருந்தும் செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல ஆன்லைனிலேயே அஞ்சலத்தின் சேமிப்பு கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தே இதனை செய்து கொள்ள வசதியாக இருக்குமே.
என்னென்ன திட்டங்களுக்கு அனுப்பலாம்?
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்பு கணக்கினை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதாற்காக அஞ்சலகத்தில் IPPB மொபைல் ஆப் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதிலிருந்தே பணத்தினையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா(SSY) கனக்கிற்கும் பணத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
வரிச்சலுகை உண்டு அஞ்சலகத்தில் 9 வகையானது சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், டெபாசிட் திட்டங்கள் என பலவும் உள்ளன. இந்த திட்டங்களில் 80 சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும்.
வங்கிக் கணக்கில் இருந்து IPPB அஞ்சலக திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான திட்டங்களாகவும் உள்ளது. ஆன்லைனில் செய்த பிறகு ஒரு முறை நீங்கள் அஞ்சலகம் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்தும் அஞ்சலக கணக்கில் பணத்தினை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அஞ்சலக கணக்கில் DOP என்ற டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட் ஆபிஸ் புராடக்ட்ஸ் என்ற ஆப்சனில் பார்க்கவும். அதன் பிறகு எங்கு பணம் அனுப்ப வேண்டுமோ? அந்த ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பிபிஎஃப் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பிபிஎஃப் கணக்கு என், DOPன் கணக்கு எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். அதேபோல மற்ற திட்டங்களுக்கும் இதுபோலவே பேமெண்ட் செய்து கொள்ளலாம். இது எவ்வளவு தொகை, என்பதை மென்சன் செய்து கொடுக்க வேண்டும். அஞ்சலகத்தின் இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் IoS-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment