இன்றைய இளம் தலைமுறையினருக்கு எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி நன்றாக தெரியும். அதே போன்று எப்படி செலவு செய்வது என்பது பற்றியும் தெரியும். ஆனால், சரியான முறையில் தான் சம்பாதித்த பணத்தை கையாள தெரிவதில்லை. நாம் எதற்காக சம்பாதிக்கிறோம், எந்தெந்த விஷயங்களில் நாம் செலவு செய்ய வேண்டும் மற்றும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக சம்பாதித்த பணத்தை வீணாக்கி விடுகிறோம். பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை எளிதாக எடுத்து கூற சில வழிமுறைகள் உண்டு. அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
செலவினங்கள் : வீட்டில் எந்தெந்த பொருட்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம், மாத மாதம் எவ்வளவு செலவு ஆகிறது, இதர செலவுகள் போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள பட்ஜெட் மிகவும் அவசியம். இதை தெளிவாக குறித்து வைத்து கொள்வதன் மூலம் பணத்தை நன்றாக கையாள முடியும். மேலும் இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எதிர்காலத்திற்கும் பெரிதும் உதவும்.
விதிமுறை : உங்களின் ஒவ்வொரு செலவுகளுக்கும் இவ்வளவு பகுதி மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று நீங்களே உங்களுக்கு கட்டுப்பாடு விதித்து கொள்ளுங்கள். 50% உங்களின் முக்கிய தேவைகளுக்கு செலவு செய்யலாம். மீதமுள்ள பணத்தில் 20-30% இதர செலவுகளுக்கு பிரித்து கொள்ளலாம். இறுதியாக உள்ள பணத்தை உங்கள் சேமிப்புக் கணக்கில் வைக்கலாம். இப்படி செய்வதால் பணத்தை சிறப்பாக கையான முடியும்.
கருவிகள் : பணத்தை சரியாக நிர்வகிக்க முந்தைய காலத்தை போன்று இல்லாமல் தற்போது பல நவீன வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பணத்தை கையாள கூடிய செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் உள்ளது மற்றும் தினசரி எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை மட்டும் இந்த செயலிகளில் பதிவிட்டால் போதும். இது போன்று உங்கள் மொபைலில் அனைத்தையும் வைத்திருப்பது உங்கள் பட்ஜெட்டைச் சரிபார்க்க விரைவான வழியாகும்.
ஷாப்பிங் : சிலர் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வதால் மட்டுமே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடிகிறது. தெருக் கடைகளில் ஷாப்பிங், தேவையான போது மட்டும் பொருட்களை வாங்குதல் மற்றும் ஆரோக்கியமான முறையில் வீட்டில் சமைத்த உணவை உண்ணுதல் ஆகியவை இதில் அடங்கும். இப்படி செய்வதால் தேவையற்ற முறைகளில் நீங்கள் செலவு செய்வதை தவிர்க்க முடியும்.
சேமிப்பு முறைகள் : உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படியாவது செலவு செய்துவிட வேண்டும் என்று எண்ணுவது சரியல்ல. உங்கள் செலவு போக மீதமுள்ள பணத்தை நல்ல முறையில் சேமிக்க பழகுங்கள். மேலும் ஒரே முறையில் சேமிக்காமல் பல்வேறு சேமிப்பு வழிகளை தேர்ந்தெடுங்கள். இது உங்களுக்கு அதிக லாபம் தரும். வங்கி சேமிப்பு, மியூஷுவல் ஃபண்ட், அஞ்சல் சேமிப்பு ஆகியவற்றில் சேமிக்க தொடங்குங்கள்.
No comments:
Post a Comment