ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.
March 28, 2022
இதய நோய்களை தடுக்கும் வேர்க்கடலை
March 21, 2022
கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!
March 16, 2022
Training on "Digital Marketing Skills for Agri-startups" by MANAGE
MANAGE-Centre for Innovation and Agripreneurship (CIA) is calling applications for the third batch of a 5-Day online training program on “Digital Marketing Skills for Agri-startups” to help Agri-startups develop a sound understanding of digital marketing & implement the same for business enhancement.
March 11, 2022
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் பழக்கவழக்கங்கள்
இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியான மன நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு சில பழக்கவழங்களை கடைப்பிடித்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
March 10, 2022
சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!
இளம் வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. கண்பார்வை குறைபாடு என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கூட ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, தவறான முறையில் படிப்பது, அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது மொபைலைப் பயன்படுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று நம்பப்படுகிறது.
கண்பார்வை குறைபாட்டிற்கான அறிகுறிகள்
அடிக்கடி தலைவலி, மங்கலான பார்வை மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது உங்கள் கண்பார்வையில் குறைபாடு உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
பார்வை குறைபாடு ஏற்படக் காரணம்
பல காரணங்களால் கண்பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில், நரம்பியல் பிரச்சனைகளும் இதில் அடங்கும். நரம்பியல் பிரச்சினைகள் மங்கலான பார்வை அல்லது சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. .
இளம் வயதில் பார்வை குறைபாடு
வாழ்க்கை முறை தவிர, மரபணு ரீதியாக, இளம் வயதில் பார்வை குறைபாடு ஏற்படலாம். ஒரு குடும்ப உறுப்பினருக்கு அல்பினிசம் நோய் அல்லது ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா இருந்தால், இந்த நிலைமைகள் குழந்தைகளுக்கு பலவீனமான கண்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே பார்வை மங்குதல், குருட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன. மேலும், அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கும்.
அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்
அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன. இவற்றை உண்ணாதீர்கள். இவை எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
அதிக நைட்ரேட் உணவு
அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பொரித்த உணவை உண்பது உங்கள் அறிவாற்றல், ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. ஒரு ஆய்வின் படி, பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களது நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை பொருட்கள்
உடல் சர்க்கரைப் பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது.
மது
மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் செய்த ஆராய்ச்சி ஒன்றில், மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இதை கடை பிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
March 8, 2022
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? எவ்வளவு குடிக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? என்ற கேள்வி சர்க்கரை நோயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நோயாளியின் மனதிலும் வந்திருக்க வேண்டும். இந்த கேள்வி அவசியமான ஒன்று என்பதால், அதற்கான பதிலை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதிலும் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால், எந்த உணவையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
அந்தவகையில் காபி குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காபி என்பது பொதுவாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் எதிர்காலத்தில் வருவதை கூட தவிர்க்கலாம் என கூறுகின்றன. காபியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக அதிக காபி குடிக்கலாம் என நினைக்கக்கூடாது. மேற்கூறிய விஷயங்கள் நன்மை என்றால், அதன் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவதாகவும் கூறுகின்றன. இதனால் நாளடைவில் டைப் 1 மற்றும் 2 ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பிபி ஏற்படும். மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். குடிக்க வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவுக்குப்பின் காபியை குடியுங்கள். நீரிழிவு நோயாளிகள் காபியை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு..!!
காலையில், நம் வயிறு காலியாக இருக்கும் போது, நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து வல்லுநர்கள் கூறியிருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.
நார்சத்து அதிகம் உள்ள உணவுகள்:
நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சிய வகையிலான அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து, சீரான வகையில், சரியான அளவில் உண்ணுங்கள்.
கார உணவுகள்:
காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.
காப்பி அல்லது தேநீர்:
பெரும்பாலானோருக்கு காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட்டால் தான் வேலையே ஓடும். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
குளிர்ந்த நீர்:
காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.
ஆல்கஹால்:
ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!
வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். பகல்நேர தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவான விருப்பமாக உள்ளது எனக் கூறலாம். ஆனால் அதனால், சில ஆரோக்கிய பாதிப்பும் உண்டு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
ஆரோக்கியத்தில் பகல் தூக்கத்தின் தாக்கம்
பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சிலருக்கு இந்த பழக்கம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.
சோம்பேறியாக இருக்காதே
சிலருக்கு, பகல் தூக்கம் என்பது தங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கான எளிதான வழியாகும். ஆனால் பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக மாற்றும்.
ஆயுர்வேதம் சொல்வது என்ன?
ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது நல்லதல்ல என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும், இருப்பினும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில் சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.
பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டியவர்கள்
நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூங்கக்கூடாது, ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு, காய்ச்சல், நினைவாற்றல் இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.
ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தைப் பின்பற்ற, அலாரத்தை அமைத்து கொண்டு தூங்கலாம், பகலில் குட்டித் தூக்கம் போடாலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.
தூக்கம் வருவதற்குரிய முத்திரைகள்
முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும். ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.
March 7, 2022
தூங்குவதற்கு முன் நீங்க செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்க எடையை உங்களுக்கே தெரியாமல் குறைக்குமாம்!
உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல, அதற்கு கணிசமான அளவு நேரம், திட்டமிடல் மற்றும் முயற்சி தேவை.
நமக்கு நேரம் கிடைக்கும்போது கூட, ஜிம்மில் கடினமாக உழைத்து வியர்வை சிந்துவதற்குப் பதிலாக சோம்பேறியாகச் சுற்றி ஓய்வெடுக்க விரும்புகிறோம். இருப்பினும், சில எளிய தந்திரங்கள் மூலம் வசதியாக உங்கள் படுக்கையிலிருந்தே எடையைக் குறைக்கலாம். உண்மைதான், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்களைச் சுற்றிலும் நீங்கள் செய்யக்கூடிய சில எளிய வேலைகள் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு இரவும் கூடுதலாக ஒரு மணிநேரம் தூங்குவது அதிக முயற்சி இல்லாமல் 270 கலோரிகளை குறைவாக சாப்பிட உதவும். ஆரோக்கியமற்ற பசியின் மீதான கட்டுப்பாடு கூடுதல் நேர தூக்கத்தால் எளிதாக்கப்படுகிறது, இதனால் உடல் எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி உணவில் 270 கலோரிகள் குறைவாக இருந்தால், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 9 பவுண்டுகள் இழக்க நேரிடும்.
தூங்கச் செல்வதற்கு முன் புரோட்டீன் ஷேக்கைக் குடிக்கவும்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் புரோட்டீன் ஷேக் உட்கொள்வது, நள்ளிரவின் பசியைப் போக்க, நள்ளிரவில் எழுவதைத் தடுக்கிறது. இது தவிர, கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடுகையில் புரதம் அதிக தெர்மோஜெனிக் மற்றும் அதிக கலோரிகளை சிறந்த முறையில் எரிக்க உதவுகிறது.
போர்வை இல்லாமல் தூங்குவது.
குறைந்த வெப்பநிலை உள்ள அறைகளில் தூங்குவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஒரே நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உடலை வழிநடத்துகிறது. குறைந்த வெப்பநிலையில் தூங்குவது உடலில் பழுப்பு நிற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பழுப்பு கொழுப்பு என்பது கொழுப்பின் ஒரு நல்ல வடிவம் மற்றும் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பசியுடன் தூங்க செல்லாதீர்கள்
கலோரி உட்கொள்ளலைக் குறைப்பது எடை மற்றும் அதிகமாக இருக்கும் அங்குலங்களை ஒரே மாதிரியாக குறைக்க உதவுகிறது என்றாலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் சரியாக சாப்பிடாமல் இருப்பது உடலை மோசமாக பாதிக்கும். நீங்கள் இரவு உணவைத் தவிர்த்தால், நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் கலோரிகளின் அளவு திடீரென்று குறைகிறது, இதன் காரணமாக உடல் பட்டினி நிலைக்குச் செல்லும். இது வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் செரிமான செயல்முறையை திறனற்றதாக மாற்றும்.
மாஸ்க் அணிந்து தூங்குங்கள்
வெளிச்சம் இல்லாத இருட்டான அறைகளில் தூங்குபவர்கள், சற்று வெளிச்சம் உள்ள அறைகளில் உறங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு 21% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தூங்கும் முகமூடியை அணிவது நல்லது. பிற்பகல் தூக்கத்தின் போது, நீங்கள் தூங்கும் போது தொலைக்காட்சியை ஆன் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
March 5, 2022
இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவும் நெல்லிக்காய் சாறு !!
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்..காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
March 4, 2022
இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. ஆகையால் தண்ணீரை சரியான அளவிலும் சீரான இடைவெளியிலும் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், இரவு நேரங்களில் தண்ணீர் அருந்தலாமா கூடாதா? அருந்தலாம் என்றால், எவ்வளவு அருந்தலாம்? இந்த கேள்விகள் பலரது மனதில் இருக்கும்.
இரவில் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?
இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது. இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தண்ணீரால் உடலில் உறிஞ்சப்படுகின்றன. தண்ணீர் குடிப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பகலில் அதிக தண்ணீர் குடிப்பதும், இரவில் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பதும் நல்லது. தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்தால், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இவர்களது உறக்கம் வெகுவாக பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான 8 மணிநேர தூக்கம் இவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
இரவில் தண்ணீர் குடிக்கும் முறை?
சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எலுமிச்சை, கிரீன் டீ, மூலிகை தேநீர் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரலாம். இதனால் தூக்கம் வராமல் போகலாம். இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரவில் தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம்?
இரவில் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால், உடல் இயற்கையான முறையில் சுத்தப்படுத்தப்படும். இது நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அல்லது கேஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சளி இருமல் உள்ளவர்களுக்கு லேசான வெதுவெதுப்பான நீர் ஒரு சஞ்சீவியாக உதவும்.
March 3, 2022
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்...
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை. இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சுமார் 10 ஆயிரம் டன்கள் புழக்கக்கத்திற்கு பிறகு சேகரிக்கப்படுவதில்லை. குப்பை கழிவுகளாக மாறுகின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
எச்சரிக்கை! இந்த உணவுகளை எப்பவும் இரவு நேரத்துல சாப்பிடாதீங்க..
ஒருவரது ஆரோக்கியத்திற்கு இரவு நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெற வேண்டுமானால் இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும். ஆனால் தற்போது பலர் இரவு நேரத்தில் பல தவறான உணவுகளை உட்கொண்டு, இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு காய்கறி. இதை பகல் வேளையில் சாபிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். ஆனால் நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். ஆகவே இரவு நேரத்தில் மறந்தும் வெள்ளரிக்காயை சாப்பிடாதீர்கள்.
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6, நார்ச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. பகல் வேளையில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இரவில்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
March 1, 2022
இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!
கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது.
அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல குணங்கள் நிறைந்தது.
கிராம்புகளில் யூஜெனால் என்ற தனிமம் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி போன்ற பிரச்சனைகள் சீராகிறது.
மேலும், கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன.
பொதுவாக, கிராம்பு எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது.
கிராம்புகளை எப்படி சாப்பிட வேண்டும்?
கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
கிராம்பு மற்றும் ஹாட் வாட்டர் ஆரோக்கிய நன்மைகள்
- கிராம்புகளை இரவில் உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய வைக்கிறது.
- கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட்டும் உள்ளது.
- பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீக்க உதவுகிறது. மேலும், பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.
- கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
- இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
- கை, கால் நடுங்கும் பிரச்சனை இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் தெரியும்
- நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளுங்கள்
- சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.