மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!! - Agri Info

Adding Green to your Life

March 10, 2022

மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

 சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன. மேலும், அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கும்.



அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன. இவற்றை உண்ணாதீர்கள். இவை எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

அதிக நைட்ரேட் உணவு

அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பொரித்த உணவை உண்பது உங்கள் அறிவாற்றல், ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. ஒரு ஆய்வின் படி, பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களது நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சர்க்கரை பொருட்கள்

உடல் சர்க்கரைப் பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது.

மது

மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்  செய்த ஆராய்ச்சி ஒன்றில்,  மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இதை கடை பிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

No comments:

Post a Comment