எச்சரிக்கை! இந்த உணவுகளை எப்பவும் இரவு நேரத்துல சாப்பிடாதீங்க.. - Agri Info

Adding Green to your Life

March 3, 2022

எச்சரிக்கை! இந்த உணவுகளை எப்பவும் இரவு நேரத்துல சாப்பிடாதீங்க..

 ஒருவரது ஆரோக்கியத்திற்கு இரவு நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெற வேண்டுமானால் இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும். ஆனால் தற்போது பலர் இரவு நேரத்தில் பல தவறான உணவுகளை உட்கொண்டு, இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் பல உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியவை. ஆனால் அதை தவறான நேரத்தில் உட்கொண்டால் பிரச்சனைகளைத் தான் சந்திக்க நேரிடும். அப்படி இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் குறித்து இப்போது காண்போம்.

வெள்ளரிக்காய்:


 வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு காய்கறி. இதை பகல் வேளையில் சாபிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். ஆனால் நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். ஆகவே இரவு நேரத்தில் மறந்தும் வெள்ளரிக்காயை சாப்பிடாதீர்கள்.


வேக வைக்காத சுண்டல்:



 வேக வைக்காத சுண்டலில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதையே இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலை பலவீனப்படுத்தி, பல நோய் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

வாழைப்பழம்:


 பழங்களிலேயே விலை குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது காய்ச்சல் மற்றும் சளி பிடிக்க வைக்கும்.

தயிர்:


 தயிர் செரிமான மண்டலத்திற்கு நன்மை அளிக்கும் ஓர் உணவுப் பொருள். ஆனால் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமான செயல்முறை சரியாக நடைபெறாது. ஆகவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஆப்பிள்:


 ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. பகல் வேளையில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் என்னும் பொருள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதே வேளையில் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் எளிதில் ஜீரணமாகாது.

உருளைக்கிழங்கு:


 உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6, நார்ச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. பகல் வேளையில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இரவில்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

நட்ஸ்:


 நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கொழுப்புக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நட்ஸ் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவற்றை பகல் வேளையில் உட்கொண்டால், இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும். அதுவே இரவு நேரத்தில் உட்கொண்டால், அவற்றில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment