Search

பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!

 வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, ​​மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். பகல்நேர தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவான விருப்பமாக உள்ளது எனக் கூறலாம். ஆனால் அதனால், சில ஆரோக்கிய பாதிப்பும் உண்டு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில  விஷயங்கள்  உள்ளன.




ஆரோக்கியத்தில் பகல் தூக்கத்தின் தாக்கம்

பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சிலருக்கு இந்த பழக்கம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.

சோம்பேறியாக இருக்காதே

சிலருக்கு, பகல் தூக்கம் என்பது தங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கான எளிதான வழியாகும். ஆனால் பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக மாற்றும்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது நல்லதல்ல என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும், இருப்பினும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில்  சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.

பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டியவர்கள்

நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூங்கக்கூடாது, ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு, காய்ச்சல், நினைவாற்றல் இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தைப் பின்பற்ற, அலாரத்தை அமைத்து கொண்டு தூங்கலாம், பகலில் குட்டித் தூக்கம் போடாலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.

0 Comments:

Post a Comment