பற்களின் பராமரிப்பு என்பது பற்களோடு முடிந்து விடுவதில்லை. பற்களின் பராமரிப்பில் அதை சுற்றியுள்ள திசுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்கள் இயற்கையான பற்களின் வேர்களை கட்டிக்காத்தால் செயற்கை வேர் என்ற தேவையே இல்லை. வெளியே தெரியும் ஈறு, உள்ளே உள்ள எலும்பு மற்றும் இணைப்புத்திசு ஆகியவை மிக முக்கியமானவை. பற்களின் வேர்கள் எலும்போடு கண்ணுக்குத்தெரியாத நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நோயையும் வராமல் தடுப்பது மிக நல்லது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருத்துவம் செய்துகொள்வது பின்னாளில் அதிக சேதமடைவதையும், செலவு மிகுதியாவதையும் தடுக்கும்.
ஈறுகள் பலம் இழப்பதற்கு பரம்பரை நோய்கள், பற்களின் பராமரிப்பில் குறைபாடு, ஒழுங்காக பல் துலக்காமல் இருத்தல், பற்களில் அதிக கரை படியவிடுதல், தவறான பழக்க வழக்கங்கள், பீடி, சிகரெட், பான் முதலியவை உட்கொள்ளுதல், இரவு நேரத்தில் பல் துலக்காமல் தூங்கி விடுவது, உணவுப் பொருட்களில் வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் அதிக மாவுச்சத்து, சர்க்கரை நிறைந்த உணவை உண்ணுதல் ஆகியவை காரணங்களாகும். பற்களை வருடத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தல் மூலம் ஆரம்ப நிலையிலேயே ஈறு பாதிப்புகளை சரி செய்யலாம் . அதிகமான நோய் தாக்கம் உள்ளவர்கள் அதன் தன்மைக்கேற்ப பல் மருத்துவத்தில் சிறப்பான கருவிகளைக் கொண்டு கெட்டுப்போன சதைகளை வருவி எடுத்து, நல்ல ஆரோக்கியமான எலும்பு துணுக்குகளையும் பிரித்து எடுக்கப்பட்ட ரத்த அணுக்கள் கொண்டும் இழந்த ஈறு மற்றும் எலும்புகளை வளர வைக்கலாம்.
ஈறுகளின் நலமே உங்கள் பற்கள் மற்றும் வாயின் நலம். வாய் என்பது உங்கள் உடலாகிய இல்லத்தின் நுழைவுவாயில் போன்றது. இதை நீங்கள் பேணி காத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்கு முற்றிய நிலையிலும் பற்களை முழுவதும் எடுக்காமல் அதற்கு நரம்பு உயிரோட்ட சிகிச்சை செய்தும், வேர்சிகிச்சை செய்தும் அதன் மூலம் பற்களை இணைத்து மேற்கொண்டு பல் எடுப்பதை 10 முதல் 15 ஆண்டுகள் தள்ளிப்போடலாம். இந்த முறையில் பற்களின் ஆரோக்கியத்தை கூட்டுவதோடு, செயற்கை வேர்கள் இல்லாமலேயே உங்கள் பற்கள் பலம் பெறுகின்றன.
உங்கள் புன்னகை தன்னம்பிக்கையையும், உங்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். பயமின்றி புன்னகை செய்யுங்கள், நீங்கள் இழந்த புன்னகையை நாங்கள் மீட்டு தருகிறோம் என்று திண்டுக்கல் கிருபா அட்வான்ஸ்டு பல் மருத்துவமனையின் டாக்டர்.வி.பெனடிக்ட் கூறியுள்ளார்.
டாக்டர்.வி. பெனடிக்ட், எம்.டி.எஸ்.,
0 Comments:
Post a Comment