கோடையில் சர்க்கரை நோயாளிகள் கவனமுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன - Agri Info

Adding Green to your Life

April 15, 2022

கோடையில் சர்க்கரை நோயாளிகள் கவனமுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன

 வானிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, ​​இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Levels (BSL)) உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் வெப்பத்தை சரியாகக் கையாள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரை நோய், கசப்பான விளைவுகளை கொடுக்கும்.



கோடைக்காலம் என்பது அனைவரையும் கடுமையாக தாக்குகிறது என்றாலும், நீரிழிவு நோய் தாக்கத்தை இன்னும் கடினமாக்குகிறது, இதனால் உடல் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் சீர்குலைகிறது.

 நீரிழிவு நோயாளிகள் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு அதிக உணர்திறன் உடையவர்கள் என்பது, தகிக்கும் சூரியனின் தாக்கத்தால் சோர்வடையும் அபாயமும் அதிகரிக்கிறது.

உண்மையில், 80°F அதாவது சுமார் 27°Cக்கும் அதிகமான வெப்பநிலை, ​​நீரிழிவு நோய்க்கான மருந்துகள் மற்றும் பரிசோதனைப் பொருட்களையும் பாதிக்கிறது.

வானிலை வெப்பமடையும் போது, ​​இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் வெப்பத்தை சரியாகக் கையாளவில்லை என்றால் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரிக்கும். 

கோடைக்காலம் மற்றவர்களை விட நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கக்கூடிய காரணங்கள் இவை: 

செயலிழக்கும் வியர்வை சுரப்பிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடைந்திருக்கும். வியர்வை சுரப்பிகள் உட்பட உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்படுகின்றன. 

பயனற்ற வியர்வை சுரப்பிகள் உடலை குளிர்விப்பதில் சிறப்பாக செயலாற்ற முடிவதில்லை. எனவே உடலின் திறன் மேலும் பாதிக்கப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நீரிழப்புக்கு பங்களிக்கும் நீரிழிவு நோயின் மற்றொரு பிரச்சனை அடிக்கடி சிறுநீர் கழிப்பது. ஏனெனில் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சிறுநீரகத்தையில் வேலையை அதிகரிக்கிறது.

சிறுநீரகங்கள் சரியாக செயல்படத் தவறினால், அதிகப்படியான குளுக்கோஸ் உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடுகிறது, இது உடலில் இருந்து அதிக அளவில் நீரை இழக்கச் செய்கிறது.  

சிறுநீரிறக்கிகள்
இரத்த அழுத்தம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த டையூரிடிக்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. டையூரிடிக்ஸ் சிறுநீரகங்களை சோடியத்தை வெளியிட தூண்டுகிறது.

இது சிறுநீரை அடிக்கடி கழிக்க தூண்டுகிறது, நரம்புகளில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என்றபோதிலும் இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே, நீரிழிவு நோயாளிகள் கோடைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment