அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!! - Agri Info

Adding Green to your Life

April 28, 2022

அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

 மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.



பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியிலசொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும். ஆண்களுக்கு மீசை பகுதியில் இப்படி சொட்டை இருந்தாலும், இதே முறையை செய்யலாம்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சின்ன வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும். திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

No comments:

Post a Comment