பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அவை உங்களை பல நோய்களிலிருந்து விலக்கி வைக்க உதவுகின்றன, ஆனால் நீங்கள் காலை உணவில் வெறும் வயிற்றில் ஒரு சில பழங்களை சாப்பிட்டால், நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும், ஏனென்றால் காலையில் பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பழங்களை ஏன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பதையும், அதை சாப்பிட சரியான நேரம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.
நம் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை நிறைந்த பொருட்களை குறைத்துக் கொண்டு, நார்ச்சத்து, ஊட்டத்துச்சத்துகள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது என்றாலும் கூட, எந்த சமயத்தில் என்ன பழங்களை நாம் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும், பழங்களால் ஏற்படும் நன்மை குறித்தும் பலருக்கும் தெரிவதில்லை.
பொதுவாக மினரல்ஸ், ஊட்டசத்துக்கள், நார்ச்சத்து போன்றவை பழங்களில் நிறைந்துள்ளன. இவை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், அன்றாடம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கவும் உதவுகிறது.
காலை வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக் கூடிய பழம், உங்கள் வயிறை சுத்தம் செய்வதாக அமைய வேண்டும். எனவே அதிகளவு நார்ச்சத்து உள்ள பழத்தை காலை உணவில் எடுத்துக் கொள்ளவது உடலுக்கு பயன் தரும். அதன்படி காலையில் தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாம்பழம், மாதுளை மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பழங்கள் சாப்பிட சரியான நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இது பித்த காலம் என்றும் அழைக்கப்படுகிறது. சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள். நீங்கள் அதை எளிதாக ஜீரணிக்க முடியும்.
No comments:
Post a Comment