மொழிபெயர்ப்புத்துறையில் பணியாற்றுபவர்கள் மேலும் தங்கள் மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தொடர்பு தகவல் அமைச்சு.
இதன்மூலம், மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலான பயிற்சி, பட்டறை வகுப்புகளில் சேர்ந்து பயில விரும்பும் சிங்கப்பூரர்கள் அதற்கான கட்டணத்தில் 90 விழுக்காடு அதாவது $10,000 வரையிலான நிதி உதவி பெறலாம்.
இந்தத் திட்டத்தின் வழி நிதி உதவி பெற விரும்புவோர், மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புத் துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் குறுகிய காலப் படிப்பு, பட்டயப் படிப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு நிதிஉதவி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் மாநாடு, கருத்தரங்கு, இணையக் கருத்தரங்கு, சான்றிதழ் கல்வி ஆகியவற்றுக்கும் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேல் விவரம்: https://www.mci.gov.sg/ttds/
No comments:
Post a Comment