நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் வழிகள் - Agri Info

Adding Green to your Life

May 9, 2022

நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் வழிகள்

உடற்­ப­யிற்­சி­களில் பல­வகை உள்­ளன. அவற்­றில் நடைப்­ப­யிற்சியும் ஒன்று. உல­கெங்­கும் நடைப்­ப­யிற்சி பிர­ப­ல­மாக இருக்­கிறது.



கடு­மை­யான உடற்­ப­யிற்சி செய்ய முடி­யா­த­வர்­கள் அல்­லது விருப்­ப­மில்­லா­த­வர்­கள் இதில் அதி­கம் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவர்­கள் மட்­டு­மின்றி உடல்தி­றன் அதி­க­முள்­ள­வர்­களும் நடைப்­ப­யிற்­சியை விரும்­பு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மிக எளி­தாக, எவ்­வித செல­வும் இன்றி செய்­யக்­கூ­டிய நடைப்­ப­யிற்சி எல்லா வய­தி­ன­ருக்­கும் பொருந்­தும்.

காற்­பந்து, நீச்­சல் போன்ற உடற்­ப­யிற்­சி­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது நடைப்­ப­யிற்சி சுவா­ரா­சி­ய­மா­ன­தல்ல என்று ஒரு சாரார் கூறு­கின்­ற­னர்.

இதை மறுக்­கும் சிலர், நடைப்­ப­யிற்­சியை எவ்­வாறு சுவா­ர­சி­ய­மாக்­க­லாம் என்­பது குறித்து ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­னர்.

நடைப்­ப­யிற்­சி­யில் அதிக ஆர்­வ­முள்­ள­வர்­கள் சிலர் முன்­வைத்­துள்ள ஆலோ­ச­னை­க­ளைச் சற்று பார்க்­க­லாம்.

மேடு பள்ளம் உள்ள பாதை

சம தள­மான பாதை­யில் நடைப்­ ப­யிற்சி மேற்­கொள்­ளா­மல் கரடு முர­டான, மேடு, பள்­ள­மான வழியைத் தேர்வு செய்­ய­லாம். அது நடைப்­ப­யிற்சியை சுவா­ர­சி­ய­மா­ன­தா­க­வும் சவா­லா­ன­தா­க­வும் மாற்­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

எடைப் பயிற்சி

உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்­ப­யிற்சி செய்ய முடி­யா­த­வர்­கள் நடைப் பயிற்சி மேற்­கொள்­ளும்­போது அதிக எடை கொண்ட பொருள்களையோ

அல்­லது ‘டம்ப்­பெல்ஸ்’ எனப்­படும் உடற்­ப­யிற்சிக் கரு­வி­யையோ கைகளில் தூக்­கி­ய­வாறு நடைப்­ப­யிற்சி செய்­ய­லாம்.

இது ஒரே நேரத்­தில் கார்­டியோ மற்­றும் உடல் வலி­மைக்­கான பயிற்­சியைச் செய்­வ­தற்கு வழி­வ­குக்­கும்.

நடைப்­ப­யிற்சி செய்­யும்­போது அதிக ஆற்­றலை உற்­பத்தி செய்­வ­தற்­கும் வித்­தி­டும்.

இத­யத்தை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருப்­ப­தற்கு இந்த வகை எடைப் பயிற்சி மிக­வும் பொருத்­த­மா­னது என்று உடற்­ப­யிற்சி நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். மேலும் வளர்­சிதை மாற்­றக் கோளா­றுக­ளின் அபா­யத்­தை­யும் இது 17 விழுக்­காடு குறைக்­கிறது.

அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்­தம் மற்­றும் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டா­மல் இருக்க இந்த நடைப்பயிற்சி மேற்­கொள்­வது சிறந்­தது.

தடுப்­புப் பலகை/கயிற்­றாட்­டம்

வெறு­மனே நடந்­து­கொண்­டி­ருந்­தால் சலிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ளது.

எனவே இடையிடையே வேறு சில எளிய பயிற்சிகளை­யும் மேற்­கொள்­ள­லாம்.

தடை தாண்­டும் போட்­டிக்­கான கட்­ட­மைப்பு போல் சில அடி உய­ரத்­திற்கு வரி­சை­யாக தடுப்­புப்

பல­கை­களை அமைத்து கால்­க­ளால் தாண்டி பயிற்சி செய்­ய­லாம்.

அதனை செய்ய முடி­யாத பட்­சத்­தில் கயிற்­றாட்­டத்­தில் ஈடு­ப­ட­லாம்.

நடைப்­ப­யிற்சி செய்­து­விட்டு 50 முறை கயிற்­றாட்­டம் பயிற்சி மேற்­கொள்­வது சிறப்­பா­னது.

அதன்­பி­றகு சிறிது ஓய்வு எடுத்து­விட்டு நடைப்­ப­யிற்­சியைத் தொட­ர­லாம்.

இந்­தப் பயிற்­சி­களைச் செய்­யும்­போது கணுக்­கா­லுக்கு அதிக அழுத்­தம் கொடுக்­கக்­கூ­டாது.

கேலரிகளை எரிக்க உத­வும் ‘புஷ் அப்’ பயிற்சி

நடைப்­ப­யிற்­சிக்கு இடையே ‘புஷ் அப்’ எனப்­படும் தண்­டால் பயிற்­சி­யும் மேற்­கொள்­ள­லாம்.

இத்­த­கைய பயிற்சி முறை­கள் வழக்­க­மாக எரிக்­கக் கூடிய கேலரி­களை இரு­ம­டங்காக உயர்த்­து­வ­தற்கு உத­வும்.

நண்­பர்­க­ளு­டன் இணைந்து நடைப்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­தல்

தனி­யாக நடைப்­ப­யிற்சி செய்­வ­தை­விட நண்­பர்­க­ளு­டன் இணைந்து அதில் ஈடு­ப­டு­வது நடைத் திறனை அதி­க­ரிக்க உத­வும்.

வழக்­க­மாக நடைப்­ப­யிற்­சிக்குச் செல­வி­டும் நேரத்­தைப் பற்றி

கவ­லைப்­ப­டா­மல் நண்­பர்­க­ளு­டன் பேசி­ய­படி அதிக தூரம் செல்­ல­லாம். அப்­படி நடக்­கும்­போது சோர்­வும் சட்­டென்று எட்­டிப்­பார்க்­காது.

அதிக கலோ­ரி­க­ளை­யும் எரித்து விட­லாம்.

இந்த வழி­மு­றை­யில் உங்­கள் ஆரோக்­கி­யம் மட்­டு­மின்றி

நண்­பர்­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­யும் ஒரே நேரத்­தில் மேம்­ப­டுத்­த­லாம். ‘நண்­பர்­க­ளு­டன் நடைப்­ப­யிற்­சிக்குச் செல்­லும் மூத்­தோர், சிறந்த உடல்­நி­லையைக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் வாழ்க்­கையை மகிழ்ச்­சி­யாக அனு

பவிப்­ப­தா­க­வும் இது­தொ­டர்­பாக ஆய்வு நடத்­திய மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

தியா­னத்­துக்­குச் சமம்

இந்­தி­யா­வின் தேசிய சுகா­தா­ரக் கழ­கம் நடத்­திய ஆய்­வின்படி,

தியா­னம் என்­பது உட­லை­யும் மன­தை­யும் ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்க உத­வும் பயிற்­சி­யா­கும்.

மன­தை­யும் உட­லை­யும் ஒரே சம­யத்­தில் தளர்த்தி, ஆயுள்­கா­லம் மற்­றும் வளர்­சிதை மாற்­றத்தைத் தியானம் ஒழுங்­கு­ப­டுத்­தக்­கூ­டி­யது.

புல்­வெ­ளி­யில் வெறும் காலில் நடைப்­ப­யிற்சி மேற்­கொள்­வது கால்­க­ளுக்­கும் மன­துக்­கும் இதமளிக்­கும்.

உடல் ஆரோக்­கி­யத்தை இது மேம்­ப­டுத்­து­கிறது. பூங்­கா­வில் நடப்­பது மனதை நிதா­னப்­ப­டுத்­த­வும் உத­வு­வ­து­டன் தியா­னம் செய்­வது போன்ற பலனை தரும்.

படிக்­கட்டுகள்

அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், அலு­வ­ல­கங்­கள், கடைத்தொகுதிகள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் போன்ற இடங்­க­ளுக்குச் செல்­லும்­போது படிக்­கட்டுகளுக்குப் பதி­லாக மின்தூக்கியில் செல்லவே பல­ரும் விரும்­பு­கி­றார்­கள். இதன் காரண மாகப் படிக்­கட்­டில் ஏறும் பழக்­கம் குறைந்­து­போய்­விட்­டது. நாள்தோறும் படிக்­கட்டு ஏறு­வ­தற்­கும் சில நிமி­டங்­கள் ஒதுக்க வேண்­டும். அது­வும் பல நோய் அபா­யங்­களில் இருந்து நம்மைத் தற்­காத்­துக்­கொள்ள உத­வும்.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment