இனிமேல் இருட்டில் தூங்க பழகிக்கோங்க... ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் ஹை அலெர்ட்! - Agri Info

Adding Green to your Life

May 25, 2022

இனிமேல் இருட்டில் தூங்க பழகிக்கோங்க... ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் ஹை அலெர்ட்!

 பெரும்பாலும் நாம் அனைவருமே நல்ல இருட்டில் தான் தூங்குவோம். ஆனால் எல்லோராலும் அது முடியாது. சிலருக்கு இருட்டில் தூங்க பயமாக இருக்கும். ஆகையால் ஜன்னல் வழியாக வரும் வெளிச்சம் அல்லது ஸீரோ-வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தி அச்சமின்றி உறங்கும் பழக்கத்தினை கொண்டிருப்பர், ஒரு சிலர் கண்கூசும் அளவிற்கு பளீச்சென்ற ஒரு மின்விளக்கு எரியாவிட்டால் தான் தனக்கு தூக்கமே வரும் என்பார்கள்.




இதில் நீங்கள் எந்த வகையாக இருந்தாலும் சரி, இனிமேல் இருட்டில் துயில்கொள்ள பழகி கொள்ளவும். இதை நாங்கள் சொல்லவில்லை, ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்! ஏனென்றால் இரவில் தூங்கும் போது ஜன்னல் வழியாக வரும் வெளிச்சத்தை கூட திரைச்சீலைகளை கொண்டு மறைக்க வேண்டும், மிதமான சுற்றுப்புற மின்விளக்குகளை கூட எரிய விடக்கூடாது.

ஏனெனில் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர் அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் கூற்றுப்படி மங்கலான வெளிச்சம் கூட தூக்கத்தின் போது இருதய செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் மறுநாள் காலையில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரிக்கும்.

பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், சீஃப் ஆஃப் ஸ்லீப் மெடிசீன் ஆக பணிபுரியும் டாக்டர் பில்லிஸ் ஜீ விளக்கமளிக்கையில், "நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், இரவில் நீங்கள் தூங்கும் அறையில் ஏற்படும் ஒரு மிதமான வெளிச்சம் கூட - குளுக்கோஸ் மற்றும் இதயத்தின் இரத்தக் குழாயின் ஒழுங்குமுறை பாதிக்கும். இது இதய நோய், நீரிழிவு மற்றும் மெட்டாபாலிக் சிண்ட்ரோம் போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே மக்கள் தூக்கத்தின் போது ஒளி வெளிப்பாட்டின் அளவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முக்கியம்" என்று கூறி உள்ளார்.

பிஎன்ஏஎஸ் (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் வழியாக, மிதமான ஒளி வெளிப்பாடாட்டினால் நம் உடல் ஹையர் அலெர்ட் ஸ்டேட்டிற்கு (higher alert state) செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒருவரின் இதயத் துடிப்பு அதிகரிக்கும். உடன் இரத்தத்தை வெளியேற்ற இதயம் சுருங்கும் விகிதமும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்திற்காக உங்கள் இரத்த நாளங்களுக்கு இரத்தம் எவ்வளவு வேகமாக செலுத்தப்படுகிறது என்ற விகிதமும் அதிகரிக்கும்.

இதுபற்றி நார்த்வெஸ்டர்னில் உள்ள நரம்பியல் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியரான டாக்டர் டேனிலா கிரிமால்டி விளக்கமளிக்கையில், "நீங்கள் தூங்கினாலும், உங்கள் தன்னியக்க நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. அது தவறு. பொதுவாக, உங்கள் இதயத் துடிப்பு மற்றும் பிற இருதயம் சார்ந்த பணிகள் இரவில் குறைவாகவும் பகலில் அதிகமாகவும் இருக்கும்" என்று கூறி உள்ளார்.

மேலும் இந்த ஆய்வின் வழியாக, ஒளிமிக்க அறையில் தூங்கி காலையில் எழுந்தவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்பட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று அர்த்தம். ஆகையால் உங்கள் இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை ஆற்றலுக்காக பயன்படுத்த முடியாது.

அதை ஈடுசெய்ய, உங்கள் கணையம் அதிக இன்சுலினை உருவாக்கும். காலப்போக்கில், உங்கள் இப்ளட் சுகர் அதிகரிக்கும். தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து பகல் நேர வெளிச்சமும் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும், ஆனால் இரவில் வெளிச்சத்திற்கு வேலை இருக்க கூடாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து ஆகும்!

No comments:

Post a Comment