மஞ்சளில் மறைத்திருக்கும் இத்தனை நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? - Agri Info

Adding Green to your Life

June 27, 2022

மஞ்சளில் மறைத்திருக்கும் இத்தனை நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சரும நிறத்தை மெருகேற்றுவது முதல் கரும்புள்ளிகளை குறைப்பது வரை, பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்துவது, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பல வைத்தியங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மஞ்சளில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்...



மஞ்சள் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவ பயன்பாட்டில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் பண்டைய நூல்களில், மஞ்சள் சருமத்தை அழகாக மாற்றவும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும், காய்ச்சலை குறைக்கவும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உயிர்வேதியியல் கலவை ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.

தோல் நன்மைகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

மஞ்சளில் சருமத்திற்கு தேவையான பல நன்மைகள் மறைந்திருக்கின்றன, ஏனெனில் இது சருமத்தின் நிறத்தைப் பராமரிக்க உதவுகிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது, கரும்புள்ளிகளை குறைக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் சரும பண்புகள் மற்றும் கொலாஜன் மாற்றங்களை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள், சருமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை சீராக்க உதவுகிறது. ஆனால் சில சமயங்களில் நேரடியாக மஞ்சளைப் பயன்படுத்துவது ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே நீங்கள் நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் முன்கையில் ஒரு சோதனை பேட்ச் செய்வது நல்லது.


வீட்டு வைத்தியம்:

1. கரும்புள்ளிகளை நீக்க:

ஒரு தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி அரிசி மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காயவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும்.


2. வயதான தோற்றத்தை மறைக்க:

1) ஒரு சிட்டிகை மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் நொறுக்கப்பட்ட முட்டை ஓடு தூள் (பயன்படுத்தப்பட்ட முட்டை ஓடுகளை நன்றாக கழுவி மிக்ஸி கிரைண்டரில் நன்றாகப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்) மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றைக் கலக்கவும். ரோஸ்ஷிப் எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசிய பிறகு, 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், உறுதியாகவும், பளபளப்பாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

2) புளித்த தயிருடன் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து, சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து, நன்றாக பேஸ்ட்டாக மாற்றிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைத்து, பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.


3. முகப்பருவை நீக்க:

ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கொள்ளவும். சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து ஃபேஸ் பேக்கை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் அப்ளே செய்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்தால் முகப்பருக்கள் மறைந்து மிருதுவான சருமம் கிடைப்பதை உணரலாம்.


4. தலைமுடி வறட்சி, பொடு பிரச்சனையை தீர்க்க:

ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில், தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி இளஞ்சிவப்பு இமயமலை உப்பு மற்றும் சில சிட்டிகை மஞ்சளை கலக்கவும். இந்த கலவையை ஷாம்பு போடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், தலைமுடி மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி பளபளப்பாக இருப்பதையும், பொடுகு செதில்கள் இல்லாமல் இருப்பதையும் நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

5. இந்த அற்புதமான சமையலறை மூலப்பொருளின் பலன்களைப் பெற மஞ்சள் எண்ணெய் மற்றும் கோல்டன் டர்மரிக் லாட்டி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment