பாத வெடிப்பை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள் !! - Agri Info

Education News, Employment News in tamil

June 30, 2022

பாத வெடிப்பை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள் !!

 தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.

















பாத வெடிப்பு உள்ளவர்கள் வெறும் கால்களில் நடப்பதால், பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும். அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 20 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கடுகு எண்ணெய்யை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

Click here to join whatsapp group for daily health tip 

No comments:

Post a Comment