Search

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு குறித்து அதிகரிக்கும் வழிப்புணர்வு..

 கொரோனா வைரஸ் ஒருவரின் உடம்பிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் விலகிவிட்டாலும் அது உடலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக தொற்று நோய் நிபுணர் ஸ்பூர்த்தி கூறுகிறார்.

மாரடைப்பு, இருதய தசைகள் வலுவிழப்பது, நுரையீரல் தொற்று, நுரையீரல் ரத்த கட்டு, நுரையீரலுக்கு வெளியே காற்று அல்லது நீர் கோர்த்து நிற்பது உள்ளிட்டவை கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகள் ஆகும் என்கிறார்.

இவை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதால் கொரோனாவுக்கு பின் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுவது அவசியம் என வலியுறுத்துகிறார்.

நுரையீரலில் உள்ள ஆல்வியோலே என்ற பலூன் போன்ற பகுதி தான் ஆக்சிஜன் நுரையீல் உள்ளே செல்ல வழி செய்கிறத கொரோனா நோயாளிகளில் இந்த பகுதி பாதிக்கப்பட்டு வடு போல் ஆகிவிடுறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கிடையாது.

எனவே தசைகளை வலுப்படுத்த சில பயிற்சிகள் செய்யலாம். நுரையீரலில் ரத்த கட்டு இருந்தால் அதை கரைக்க மருந்து கொடுக்கப்படும் என நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுரேஷ் கூறுகிறார்.

கொரோனா என்ற வைரஸ் நோயை எதிர்த்து உடலின் எதிர்ப்பு சக்தி போராடுகிறது. அது எதிர்த்து போராடும் போது உடலின் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி தான் மாரடைப்பு, மூளை பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றன.

இதுவரை சர்வதேச அளவில் நுரையீரல் பாதிப்புகள் மட்டும் தான் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பல பாதிப்புகள் நோயாளிகளிடம் காணப்படுகின்றன என நுரையீரல் சிறப்பு நிபுணர் ஜாக்கின் மோசஸ் கூறுகிறார்.

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment