மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள் உறுப்புகளில் முக்கியமானது, மண்ணீரல்.
இது கல்லீரலுக்கு அருகில் இருக்கிறது. நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது.
முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான்.
மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்குப் பங்கு உண்டு. ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மண்ணீரல் அதிகரிக்கிறது. வியர்வைச் சுரப்பிகளையும் தூண்டி செயல்படவைக்கிறது.
மண்ணீரல் பாதிப்பின் அறிகுறிகள்:
உடம்பின் எடை அதிகரிப்பது, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது, நாக்கு வறண்டு விறைப்புத்தன்மையை அடைவது, வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாவது, வாந்தி, உடல் பலவீனமடைவது, உடல் பாரமாகத் தெரிவது, கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சிறுநீர் சரியாகப் பிரியாமல் இருப்பது போன்றவைகள் எல்லாம் மண்ணீரல் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.
மண்ணீரல் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்?
* அடிக்கடி கோபம், எரிச்சல், மனஅழுத்தம் அடைவோருக்கு மண்ணீரல் பாதிப்படையலாம்.
* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும்.
* கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.
* ரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்புக் காரணமாகவும் மண்ணீரல் பாதிப்படையலாம்.
* கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் ஆகியவையும் மண்ணீரலைப் பாதிக்கும்.
* கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைகட்டிய பயறு, சின்ன வெங்காயம் போன்றவை மண்ணீரலுக்கு நலம் பயக்கும். பழவகைகளில் கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலுக்கு உகந்தது.
மகத்துவம் நிறைந்த மண்ணீரல் மீது அதிக அக்கறை கொள்வோம். அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக் கவழக்கங்களை மாற்றிக்கொள்வோம்.
No comments:
Post a Comment