தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் சுக்கின் நன்மைகள் என்ன?.! - Agri Info

Adding Green to your Life

June 18, 2022

தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் சுக்கின் நன்மைகள் என்ன?.!

 ஏலக்காய் மற்றும் சுக்கை காபியில் சேர்த்துக்கொள்வதன் காரணம்:

சுக்கு பயன்கள்:

இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.

சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் பயன்கள்:

ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.

கபத்தைக் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன. ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment