உடலின் உள் உறுப்புகள் தூய்மை என்பது உடலின் வெளிப்புறத் தூய்மையைப் போலவே முக்கியமானது. உடலில் சேரும் அழுக்குகள் பல கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் சேரும் அழுக்குகளை, நச்சுக்களை சுத்தம் செய்வது அவசியம்.
துரித உணவுகள், போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சமச் சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்ற பல கெட்ட பழக்கங்கள் காரணமாக உடலில் நச்சுக்களும் அழுக்குகளும் சேருகின்றன.
நமது உடலை ஏன் டீடாக்ஸ் செய்ய வேண்டும் அதாவது, நச்சுக்களை நீக்க வேண்டும், அல்லது எந்த நேரத்தில் நம் உடலை நச்சு நீக்குவது அவசியம் ஆகிறது, உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுப் பொருட்கள் இருந்தால், உங்கள் உடல் எந்த விதமான சமிக்ஞையை அளிக்கிறது ஆகியவை தொடர்பாக பலரது மனதில் சாந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி எழுகின்றன.
வாய் மற்றும் உடல் துர்நாற்றம்
உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் அல்லது உடல் வியர்வையில் துர்நாற்றம் இருந்தால், உங்கள் உடலில் அதிக அளவில் நச்சுக்கள் அல்லது அழுக்குகள் சேர்ந்து விட்டது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். உங்கள் உடலில் நிறைய நச்சுப் பொருட்கள் சேரும்போது, உங்கள் உடல் வியர்வையில் துர்நாற்றம் வீசப்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் சுவாசத்திலும் துர்நாற்றம் வீசும். இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொண்டால், உங்கள் உடல் இப்போது நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வயிற்று வலி
வாய்வு தொல்லை, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். இது உங்கள் உடலுக்கு டீடாக்ஸ் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் குடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அழுக்கு மற்றும் நச்சுகள் உங்கள் செரிமானத்தை கெடுத்து வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். உங்களுக்கு வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டாலோ அல்லது அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ, உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஹார்மோன் சமநிலை பாதிப்பு
பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரிக்கும் போது, அது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மேலும் மனநிலை மாற்றங்கள், எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க, ஒரு வலுவான வளர்சிதை மாற்றம் இருக்க வேண்டியதுமிகவும் முக்கியம். எனவே, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலைக்கு, உடலை நச்சு நீக்குவது அவசியம்.
முகத்தில் முகப்பரு மற்றும் புள்ளிகள்
பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள அழுக்குகளே காரணம். உங்கள் இரத்தம் தூய்மையாக இல்லை என்றால், தோல் வெடிப்பு, முகப்பரு, புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, பல சரும பிரச்சனைகளைகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment