சீரகம், ஓமம், ஏலக்காய், திரிபாலா போன்றவற்றை தினமும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
நம்முடைய குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை குடலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பித்தம், அடிக்கடி வாந்தியும் ஏற்படும். இதனால் உடல் சோர்வடைவதோடு மன அழுத்தமும் நமக்கு உண்டாகிறது. குறிப்பாக பருவமழைக்காலங்களில் பாக்டீரியாக்களின் தொற்று அதிகளவில் ஏற்படுவதால் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
எனவே இந்நாள்களில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வோம்.
பருவகாலங்களில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைகள்:
உடலில் செரிமானம் நன்றாக சீராக இருப்பதற்கு குடல் ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். நமது குடல் சீராக இருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை பல்வேறு வியாதிகளுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
குடல் ஆரோக்கியமில்லா நிலையை சந்திக்கும் போது தான், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, தோல் எரிச்சல், அதிக தாகம், காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, வறண்ட சருமம் மற்றும் பொதுவான உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை தினமும் நாம் சாப்பிட வேண்டும்.
மஞ்சள் பூக்கள் கொண்ட மூலிகை, சிறந்த வாய் புத்துணர்ச்சியூட்டி, அமிலத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது மற்றும் குடல் அழற்சியைக் குறைக்கிறது.
சீரகம், ஏலக்காயை தினமும் தண்ணீரில் கலந்து அருந்தலாம் :
இரைப்பை பிரச்சனைகளால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஓமம் உதவுகிறது. எனவே வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஓமம் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் அசாஃபோடிடா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இரைப்பையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
வயிறு அல்லது தொப்புளில் விளக்கெண்ணெய் தடவலாம்..
திரிபாலா பொடி- நமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செரிமானம் நடைபெறுவதற்கு திரிபாலா மிகவும் உதவியாக உள்ளது. எனவே திரிபாலா பொடியை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக சிறிதளவு சாப்பிடலாம்.
பொடியாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால், திரிபாலா பொடியை சுடு தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவர்கள் செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இதனை பயன்படுத்துகின்றனர். இதோடு நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் போன்றவையும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
மேலும் மஞ்சள், வால்மிளகு, அதிமதுர வேர், சிலிப்பெரி எர்ம் போன்றவற்றையும் நமது குடல் ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்
No comments:
Post a Comment