நம் உடல்நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வதே எளிய மற்றும் சக்தி வாய்ந்த உத்தியாகும். தினசரி நீங்கள் கடைப்பிடிக்கும் சில தவறான வாழ்வியல் பழக்கங்களால் உங்கள் உடல் நலன் மட்டுமல்லாது மனதில் கவலை அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் மற்றும் உணவு சாப்பிடுவதில் மாற்றங்கள் போன்றவை உண்டாகும்.
நம்மிடம் உள்ள தவறான பழக்க, வழக்கங்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் மாற்றிவிட இயலாது என்றாலும்கூட சிறுக, சிறுக நமது பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்வதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு படிநிலையாக அமையும்.
தூங்கி எழுந்த பிறகு..
ஒரு நாள் பொழுதை நீங்கள் எப்படி செலவிடப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் காலையிலேயே தெரிய தொடங்கி விடும். காலையில் நாம் கடைப்பிடிக்கும் புதிய பழக்க, வழக்கங்கள் நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும்.
நீல வானம் மற்றும் உயர்வான எண்ணம் :
நாம் தூங்கி எழுந்த உடனேயே சற்று புதுமையான காற்றை சுவாசிக்க வேண்டும். மிக தீங்கான மொபைல் ரேடியேஷனில் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் வெளியே சென்று சூரிய ஒளியில் வலம் வரலாம். காலை நேர சூரிய ஒளி நம் மீது வீசும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆகிறது.
ஆயில் புல்லிங் :
தூங்கி எழுந்த நிலையில் நம் வாயில் ஏராளமான பாக்டீரியா மற்றும் ஜெம் தொற்றுகள் இருக்கும். அவற்றை வெளியேற்றுவதற்கு மிக சிறந்த ஆயுர்வேத வழிமுறை ஆயில் புல்லிங் செய்வதாகும். வாய் சுத்தம் மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் இது நன்மை பயக்கும்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்யலாம்.
முதலில் தண்ணீர் அருந்துங்கள் :
அதிகாலையில் வெறும் வயிற்றில் வேறெந்த உணவோ, பானங்களோ எடுத்துக் கொள்ளும் முன்பாக தண்ணீர் அருந்தவும். நமது உடலில் 60 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அது குறையும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதன் விளைவாக தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே, நாள் முழுவதும் நீர்ச்சத்து அவசியமானதாகும்.
ஃபோனுக்கு முன்பாக உங்களுக்கு ரீசார்ஜ் :
நம் வாழ்க்கையை பெரும்பகுதி ஆக்கிரமித்துள்ள மொபைல் ஃபோனுக்கு சார்ஜ் செய்வதே அதிகாலையில் நாம் முதன்மையான பணியாக மேற்கொள்வோம். அது ஒரு பக்கம் முக்கியம் தான் என்றாலும், அதைவிட முக்கியமானது நம் உடலுக்கு நாம் ரீசார்ஜ் செய்து கொள்வது.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நமது உடலுக்கு எளிமையான உடற்பயிற்சிகள் அவசியம். முடிந்த வரையிலும் நம் உடல் இயக்கத்தை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வேம்பு தண்ணீரில் குழியல் :
வேம்பின் பலன்கள் என்ன என்பதை இந்தியர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. பல நூற்றாண்டுகளாக நாம் அதை ஒரு மருந்து பொருளாக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக சரும பிரச்சனைகள், அலர்ஜி போன்றவற்றுக்கு சிறப்பானது. வேம்பு கலந்த தண்ணீரில் குளித்தால் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
தூங்குவதற்கு முன்பாக..
இரவில் நாம் செய்யத் தவறும் சில விஷயங்கள், அடுத்த நாளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றன. ஆகவே, இரவில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க, வழக்கங்களையும் இங்கு பார்க்கலாம்.
உணவுக்கு பிறகு வஜ்ராசனம் :
வயிறு உப்புசம், ஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கும். இது மிக எளிமையான பயிற்சி என்றாலும் கூட, புதியவர்களுக்கு சற்று கடினமாக தோன்றும்.
நாளைய தினத்துக்கு தயாராவது :
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களுக்கு மிகுந்த குழப்பங்கள் உண்டாகிறது என்றால், முதல் நாளே 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கி அடுத்த நாளுக்கு திட்டமிடுங்கள். குறிப்பாக தூக்கமின்மையை தவிர்க்க இது உதவும்.
சருமத்தை சுத்தம் செய்வது :
நீங்கள் எண்ணெய் வழியும் முகத்தை கொண்டவர் என்றால், உறங்க செல்வதற்கு முன்பாக நம் முகத்தை கழுவுவது நல்லது. இது செல்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.
பாதங்களுக்கு மசாஜ் :
நாள் முழுவதும் நடந்து அல்லது அலைந்து திரிந்து சோர்ந்து போன பாதங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம்.
மைண்ட் பிரெஷிங் :
ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் பல் துலக்குவதைப் போலவே நமது மனதையும் சுத்தம் செய்து கொள்வது அவசியமானது. இது கவலை, மனா அழுத்தம் போன்றவற்றை குறைக்க உதவும்.
0 Comments:
Post a Comment