கிராம்பின் ஆரோக்கிய பண்புகள்: மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால், மனிதர்கள் மட்டும் நவீன உலகில் வாழும் உயிரினமாகவும், தொழில்நுட்பத்தால் இயற்கையை விட்டு வெகுதொலைவில் வந்து விட்ட உயிரினமாகவும் மாறிவிட்டார்கள்.
எனவே, இயற்கையிலேயே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் செயற்கையாகவே பெற வேண்டியிருக்கிறது. ஆனால், இயற்கையின் கொடைகள் அற்புதமானவை. இயற்கையில் விளையும் பொருட்களே, நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
வீட்டிலேயே உணவுக்கு பயன்படுத்தும் சில பொருட்களே நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதில் கிராம்புக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய சமயலறைகளில் நீங்கா இடம் பிடித்துள்ள கிராம்பு பல அற்புதமான ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டதாகும்.
உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும் கிராம்பு, சுவையான மசாலா ஆகும். பல் வலிக்கும், வயிறு மற்றும் தொண்டைக்கும் ஆரோக்கியத்தையும் ஆசுவாசத்தையும் அளிக்கிறது கிராம்பு.
யூஜெனோல் என்ற பொருள் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இது, கிராம்பில் போதுமான அளவு உள்ளதால், கிராம்பின் பயன்பாடு மன அமைதியை ஏற்படுத்துகிறது.
வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பை எப்படி பயன்படுத்தினால் நல்லது?
படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்குவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்தும் கிராம்பை இரவில் சாப்பிடுவது நல்லது.
தினமும் கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவுகிறது.
உணவே மருந்தாகலாம் ஆனால் மசாலா மருந்தாகுமா? ஆகும் என்பதற்கு அட்டகாசமான உதாரணம் கிராம்பு.
No comments:
Post a Comment