அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் ம்ற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம். நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்...
* நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.
* அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதை குறிக்கும்.
* சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால் இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்க்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம்.
* நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும்.
* மஞ்சள் நிற நாக்கு வயிறு அல்லது கல்லீரலில் பிரச்சனை, மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகளை உணர்த்துகிறது.
* நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தால் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டும்.
* சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* நாக்கில் காப்பி நிறத்தில் பதிவு இருந்தால் நுரையீரல் பாதிப்பை குறிக்கும்.
* நாக்கில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் இருந்தால் நாக்கின் உராய்வுத்தன்னை குறைவதையும், எரிச்சல் தன்மை இருந்தால பயன்படுத்தும் பற்பசை நாக்கில் அலர்ஜியை ஏற்படுத்துவதையும் உணர்த்தும். நாக்கி சுத்தமாக பராமரிக்க..
* காலை மாலை இருவேளையும் பற்களை சுத்தம் செய்வது போல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
* வாரம் ஒருமுறை வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவதை தடுக்கும் குணம் கொண்டது.
* அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
* சாப்பிட்டு முடித்தவுடன தண்ணீர் ஊற்றி, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தினமும் நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனை தரும்.
* அவ்வப்போது இளம் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாயை கொப்பளிக்கலாம்.
* இவ்வழிமுறைகளை பின்பற்றினால் நாக்கின் ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
No comments:
Post a Comment