வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சமபவங்களை நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.
தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை மறுத்து விட முடியாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.
மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எனவே எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் சில காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால், மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம். சோயாபீன், தக்காளி, வெங்காயம், ப்ரோக்கோலி போன்ற பல காய்கறிகள் மாரடைப்பைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. ப்ரோக்கோலியில் உள்ள கோலின் சத்தும் அதிக அளவிலாக வைட்டமின் கே சத்தும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
ப்ரோக்கோலி மட்டுமல்ல, லெட்யூஸ், முட்டைகோஸ் போன்ற இலை வடிவ காய்கறிகளும் இதயத்தை பலப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்.
மீன் உணவுகள்
மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். அவை இதயத்தைப் பாதுகாப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதன் மூலம், அமில கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இது இதய நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மீன்கள்.
சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் சிறந்த தேர்வு
வைட்டமின் சி, டி மற்றும் ஈ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது. வைட்டமின் டி மீன்களில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் காளான்களை சாப்பிடலாம். பச்சை காய்கறிகள், பப்பாளி, கீரை, குடை மிளகாய் ஆகியவை வைட்டமின்-சி மற்றும் ஈ ஆகியவற்றை உங்களுக்கு அள்ளி வழங்குகின்றன.
0 Comments:
Post a Comment