Search

குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்களா..? இன்னைக்கே முடிவுகட்ட இதை டிரை பண்ணுங்க...

 ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாத நிலையை நீங்கள் பார்க்க இயலுமா? ஒற்றுமையாக விளையாடுவது என்றாலும் கூட எந்த நேரமும் சத்தமிட்டபடி கல, கலவென விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதிலும் சண்டை என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வீடே இரண்டாகிவிடும். அந்த அளவுக்கு சண்டையும் களைகட்டும். டிவி ரிமோட் யார் வைத்துக் கொள்வது, மொபைலில் யார் கேம் விளையாடுவது, ஸ்நாக்ஸ் எப்படி பகிர்ந்து கொள்வது என பல காரணங்களுக்காக சண்டை நடக்கும்.

ஆனால் குழந்தைகளிடம் வஞ்சகமும், பழி உணர்ச்சியும் இருக்காது. எந்த சண்டையானாலும் உடனுக்குடன் அதை முடித்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவார்கள். இருந்தாலும், குழந்தைகள் மத்தியில் சண்டை சச்சரவுகள், வீண் வாதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கலாம்.

குழந்தைகளின் சண்டை பொதுவானதே

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில், சண்டையை எப்படி நிறுத்துவது, அவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்வது, எப்படி அமைதியை நிலைநாட்டுவது என்பது குழப்பத்திற்கு உரிய விஷயமாக இருக்கும். ஆனால், இது இயல்பான விஷயம் தான்.


விதிமுறைகளை உருவாக்க வேண்டும்

சண்டைகளை தவிர்க்க முடியாது என்றாலும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நாம் உருவாக்கி விட வேண்டும். எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்கு தெரிந்து விட்டால், அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.

குழந்தைகளை சமமாக பார்க்க வேண்டும்

குழந்தைகளிடையே நீங்கள் பாகுபாடு காட்டக் கூடாது. அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டும். அனைத்து குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவும்.

தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம்

குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தாங்களாகவே தீர்வு கண்டு கொள்வார்கள். கட்டுக்கடங்காமல் செல்லும்போது மட்டும் நீங்கள் தலையிட்டால் போதுமானது.

எப்போது வழிகாட்டலாம்

பெற்றோராக நீங்கள் எப்போதுமே உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டலாம். ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவது, எப்படி தீர்வு காண்பது என்பதை சொல்லிக் கொடுக்கலாம்.

தகவல் தொடர்பு முக்கியம்

பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். உங்கள் செல்லக் குழந்தைக்கு இதுகுறித்து தெரியாமல் இருப்பின், நீங்கள் அதை கற்றுக் கொடுக்கலாம்.

நியாயமான தீர்வு தருவது

தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் குழந்தைகள் தடுமாறும்போது நீங்கள் தலையிட்டு முடிவு சொல்லலாம். ஆனால், அது நியாயமானதாக இருக்க வேண்டும்.

நல்ல உதாரணமாக இருக்கவும்

பெற்றோராகிய நீங்கள் அடுத்தவரிடம் சண்டையிடாமல், வீண் வாதம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களை பார்த்து குழந்தைகள் நற்பண்புகளை கற்றுக் கொள்ளும். நீங்கள் சண்டையிட்டால் அதே பழக்கம் குழந்தைகளிடமும் தொற்றிக் கொள்ளும்.


Click here to join whatsapp group for daily health tip 




0 Comments:

Post a Comment