உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் உணவுகள்: சிறுநீரகங்கள் உடலின் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான பகுதியாகும். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். உடலில் இருந்து கழிவுகள் அல்லது நச்சுகளை அகற்றுவது சிறுநீரகத்தின் செயல்பாடாகும். இது சிறுநீர் உற்பத்தியுடன், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களையும் சுரக்கிறது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரகத்தை நேரடியாக சேதப்படுத்தும் சில உணவுகள் உள்ளன. தவறான உணவுப் பழக்கம் மற்றும் குழப்பமான வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கல், சிறுநீரக புற்றுநோய் போன்ற பல வகையான பிரச்சனைகள் சிறுநீரகத்தில் ஏற்படுகின்றன.
சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?
சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீரக பிரச்சனை கண்டறியப்பட்டவர்கள், தங்கள் உணவில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சிலருடைய பிரச்சனைகள் கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்
- பசியிழப்பு
- உடல் வீக்கம்
- அதிக குளிர்
- தோல் தடிப்புகள்
- சிறுநீர் கழிப்பதில் சிக்கல்
- எரிச்சல்
சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை
மது:
அதிகமாக மது அருந்துவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். அது உங்கள் மூளையை பாதிக்கலாம். ஆல்கஹால் உங்கள் சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும்.
உப்பு:
உப்பில் சோடியம் உள்ளது. இது பொட்டாசியத்துடன் சேர்ந்து, உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது. ஆனால் உப்பின் அளவு உணவில் அதிகமானால், அது திரவத்தின் அளவை அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்துக்கு சேதம் விளைகிறது.
பால் பொருட்கள்:
பால், பனீர், போன்ற பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல. பால் பொருட்களில் புரதங்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகங்களை சேதப்படுத்தும். பால் பொருட்களிலும் கால்சியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும். எனவே, அவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
சிவப்பு இறைச்சி:
சிவப்பு இறைச்சியில் புரதம் மிகவும் அதிகமாக உள்ளது. புரதம் நம் உடலுக்கும் அவசியம். சிறுநீரகத்தை பாதிக்கும் இத்தகைய இறைச்சி ஜீரணிப்பது நம் உடலுக்கு கடினமாகிறது.
No comments:
Post a Comment