மூட்டு ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்துவது எப்படி:
முழங்கால் மற்றும் மூட்டு வலி பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். பல நேரங்களில் முழங்கால் வலி காயம் காரணமாகவோ அல்லது கீல்வாதம் போன்ற பல நோய்களின் காரணமாகவோ ஏற்படலாம்.
வயது ஏற ஏற, நாட்பட்ட வலியும் வெளிவரத் தொடங்குவதையும் அடிக்கடி நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீண்ட நேரம் எங்கும் உட்காரவோ, அதிக நேரம் நடக்கவோ முடியாது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. . கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏதேனும் காரணத்தால் மூட்டு வலி ஏற்பட்டால், நீங்கள் சில எளிய வழிமுறைகளின் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மழை மற்றும் குளிர்காலத்தில் மூட்டு வலி கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் இந்த காலங்களளில் உணவில் மாற்றங்களைச் செய்வதைத் தவிர, நீங்கள் லேசான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே கால்சியம் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை குறைவாகவே இருக்கும். மூட்டு வலியை போக்கும் பயனுள்ள உணவுகளை பற்றி காணலாம்.
பால் நுகர்வு:
உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளை வளர்க்கவும் விரும்பினால், தினமும் பால் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாலில் புரதம், கால்சியம், கூடுதலாக, பாஸ்பரஸ், மெக்னீசியம், அயோடின் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, கே மற்றும் ஈ உட்பட பல தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் ஆற்றல் உள்ளது.
பெரும்பாலும் உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டாலோ, அல்லது சளி பிரச்சனை இருந்தாலோ, நாம் பாலுடன் மஞ்சள் சேர்த்து உட்கொள்கிறோம். பால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, வலியை தாங்கும் சக்தியையும் அளிப்பதே அதற்கு காரணமாகும்.
இஞ்சி:
இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்.
நட்ஸ் / உலர் பழங்கள்:
நட்ஸ் / உலர் பழங்களின் நன்மைகளை அனைவருக்கும் தெரியும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment