உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
“உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு விதவிதமாக நாம் உணவுகளை சமைத்தாலும் சிறிதளவு உப்பு குறைவாகிவிட்டால் சுவையே இருக்காது.
எத்தனை மசாலாக்கள் போன்றவற்றை சேர்ந்தாலும் சரியான அளவு உப்பு இல்லையென்றால் சொல்லவே தேவையில்லை, யாரும் சாப்பிடமார்கள். ஆனால் சுவைக்காக நாம் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் போது நம்முடைய ஆயுள் குறைகிறது என அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
சுமார் ஐந்து லட்சம் நடுத்த வயது மக்களை வைத்து அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அன்ட் டிராபிக் மெடிசின் பேராசிரியர் லு குய் என்பவர் ஆராய்ச்சி நடத்தினார்.
இதில் தேவைக்கு அதிகமாக உப்பு உடலில் சேரும் போது, அதை ஜீரணிக்க நமது சிறுநீரகங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இதனால் பல நேரங்களில் சிறுநீரக செயலிழப்பு உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
முகம், கை மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிப்பதற்கும் உப்பு காரணமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். மேலும் உப்பை அதிகளவில் உணவில் சேர்க்கும் போது, பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என அதிர்ச்சி தரும் வகையில் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளது.
மேலும் உப்பைப்பயன்படுத்தாதவர்களுடன் , உப்பு அதிகளவில் சாப்பிடுபவர்களை ஒப்பிடும் போது இவர்கள் சீக்கிரம் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தொடர்ந்து உப்பைச் சேர்க்கும் ஆண்களும் பெண்களும் அவர்களது 50 வயதிற்குப் பிறகு உடலில் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
உணவில் உப்பு எவ்வளவு சேர்க்க வேண்டும்?
உப்பு அதிகளவில் சாப்பிடுவதால் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கையில், சரியாக அளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 2400 மில்லிகிராம் உப்பை சேர்க்க வேண்டும். அதே சமயம் ஒருவருக்கு குறைவான அளவு உப்பு இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 1.5 மில்லிகிராம் சாப்பிடலாம். சாரசரியாக ஒரு நாளைக்கு 5 கிராமிற்கு மேல் உப்பை சேர்த்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டிக்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவாடு, உப்பு கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்..
சமீப காலங்களில் நடுத்தர வயதினர் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பினால் பலியான சம்பவங்கள் நடக்கிறது. இதற்காக பலமுறை டயாலிசிஸ் செய்து பார்த்தாலும் பலனில்லாமல் போய்கிறது. இறுதியில் உயிரிழக்கும் அபாயமும் நேரிடுகிறது. எனவே “அளவான உப்பே ஆரோக்கியம்“ என்பதை மனதில் வைத்து இனி உணவில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம்….
No comments:
Post a Comment