உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.
தசைநார் வலிக்கான காரணம்
இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தசைநார் வலிக்கான அறிகுறிகள்
தசைநார் வலி நோய் பாதிக்கபப்ட்டவர்களுக்கு, அதிக அளவிலான சோர்வு, தூக்கமின்மை, மூட்டுகளில் தாங்க முடியாத வலி, கடுமையான தலைவலி, எதிலும் கவனம் செலுத்து முடியாத மனநிலை போன்ற அறிகுறிகள் இருக்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தசைநார் வலிக்கான சிகிச்சை
நோய்க்கான சிகிச்சையில், மருந்துகள் வழங்கப்பட்டாலும், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நீக்கும் யோகா பயிற்சிகள், தியான பயிற்சிகள் ஆகியவை முக்கிய ப்பங்கு வகிக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
0 Comments:
Post a Comment