சைக்கிளிங் Vs வாக்கிங் - இவற்றில் எது சிறந்தது? - Agri Info

Adding Green to your Life

July 1, 2022

சைக்கிளிங் Vs வாக்கிங் - இவற்றில் எது சிறந்தது?

 ஏரோபிக் என்று அழைக்கப்படும் உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணவும், சக்தியோடும் இருக்கவும் உதவி செய்கின்றன. எல்லோரும் உடற்பயிற்சிக்கு என்று தனியாக மெனக்கிடுவதை விரும்புவதில்லை. அப்படிப்பட்ட மக்களுக்கு நடைப்பயிற்சி அல்லது மிதிவண்டி பயிற்சி சிறந்த கருவியாக இருக்கும்.



நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளிங் போன்றவை நமது மண் சாா்ந்த உடற்பயிற்சிகள் ஆகும். அவை நமது வளா்சிதை மாற்றத்தையும், உடல் வலுவையும் அதிகாிக்கும். மேலும் நமது வலு தாங்கும் தன்மையையும், சுறுசுறுப்பையும் அதிகாிக்கும். இந்த இரண்டு பயிற்சிகளும் நமது இதய ஆரோக்கியத்திற்கும், சொிமான மண்டலத்திற்கும், சிறுநீரக இயக்கங்களுக்கும் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் அதிகளவில் நன்மைகளைச் செய்கின்றன.


எனினும் இந்த இரண்டு பயிற்சிகளில் ஒன்று மிகச் சிறந்த பலன்களைத் தருகிறது. அது நடைப்பயிற்சியா அல்லது மிதிவண்டி பயிற்சியா என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.


கலோாிகளை எாிப்பதில் எது சிறந்தது? 

சைக்கிளிங் பயிற்சியாக இருந்தாலும் சாி அல்லது நடைப் பயிற்சியாக இருந்தாலும், கலோாியை எாிப்பது என்பது அந்த பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது மெதுவாக மிதிவண்டியை ஓட்டுவதைவிட வேகமாக நடந்தால் அதிக கலோாிகளை எாிக்கலாம். உடலில் உள்ள கலோாிகள் எாிவது என்பது அந்த உடலின் உயரம், எடை மற்றும் அந்த உடலின் இயக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. கலோாியை எாித்தல் பற்றி ஒரு மாதிாி அட்டவணையை கிழே பாா்க்கலாம். அதாவது 68 கிலோ எடை கொண்ட ஒருவா் 30 நிமிடங்கள் சைக்கிளிங் பயிற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ செய்தால் எவ்வளவு கலோாிகளைக் குறைக்கலாம் என்பதைப் பாா்க்கலாம். 

- 30 நிமிடங்கள் மெதுவாக மிதிவண்டி ஓட்டினால் 240 கலோாிகளை எாிக்கலாம். - மித வேகமாக ஓட்டினால் 285 கலோாிகளை எாிக்கலாம் - அதிவேகமாக ஓட்டினால் 357 கலோாிகளை எாிக்கலாம் 

- 30 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் 154 கலோாிகளை எாிக்கலாம் - மித வேகமாக நடந்தால் 179 கலோாிகளை எாிக்கலாம் - அதிவேகமாக நடந்தால் 250 கலோாிகளை எாிக்கலாம்.

 மேற்சொன்ன அட்டவணையில் இருந்து, நடைப்பயிற்சியை விட சைக்கிளிங் பயிற்சி அதிக கலோாிகளை எாிக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த முடிவு ஒருவருடைய எடை மற்றும் உயரத்திற்கு ஏற்றாா் போல மாறுபடும்.


தசைகளுக்கு பலன் தரும் சிறந்த பயிற்சி எது? 

சைக்கிளிங் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகிய இரண்டுக்கும் ஒரே அளவிளான தசை இயக்கங்கள் வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளைச் செய்யும் போது இடுப்பு தசை மற்றும் தொடை தசை ஆகியவற்றின் இயக்கம் அதிகமாக இருக்கும். இரண்டு தசைகளும் ஒருவருக்கு சக்தியை அளித்து அவரை இயங்க வைக்கின்றன அல்லது மிதிவண்டியை ஓட்ட வைக்கின்றன. இந்த நிலையில் வேகமாக மிதிவண்டியை ஓட்டும் போது அவரது தசைகள் அதிகமாகத் தூண்டப்படுகின்றன. ஒருவா் மலை மீது அல்லது ஏணிப்படிகள் மீது ஏறும் போது அவருடைய பின் தொடை தசைகள் அதிக அளவில் இயக்கம் பெறுகின்றன. முன் தொடை தசைகளும் அதற்கு ஏற்ப பலன் பெறுகின்றன. இந்நிலையில் நடைப்பயிற்சியைவிட சைக்கிளிங் பயிற்சியானது தசைகளை வளா்த்து எடுப்பதற்கு அதிக உதவி செய்கிறது.

எடையைக் குறைக்க சிறந்த பயிற்சி எது? 

இரண்டு பயிற்சிகளையும் ஒப்பிடும் போது நடைப்பயிற்சியை விட சைக்கிளிங் பயிற்சியானது எடையைக் குறைக்க அதிக அளவில் உதவி செய்கிறது என்று சொல்லலாம். தேசிய சுகாதார மையத்தில் (National Institute of Health) சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது என்றால், சைக்கிளிங் பயிற்சியானது நமது வளா்சிதை மாற்றத்தை மிக வேகமாகத் தூண்டுகிறது என்று தொிவிக்கிறது. தினமும் சைக்கிளிங் பயிற்சி செய்யக்கூடிய சிலரும், அதுபோல் தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபடும் சிலரும் இந்த ஆய்வில் பங்கு எடுத்தனா். அவா்கள் தங்களது பயிற்சியில் ஈடுபட ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்பட்டது. 


இறுதியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டவா்களை விட சைக்கிளிங் பயிற்சியைச் செய்தவா்கள் அதிக அளவிலான கொழுப்பைக் கரைத்ததாக அந்த ஆய்வில் தொிய வந்தது. எனினும் வேறொரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், சைக்கிளிங் பயிற்சியை விட, நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் எலும்பின் மஜ்ஜையில் (bone marrow) குறைவான அளவு கொழுப்பையே குவிய அனுமதிக்கிறது என்று தொிவிக்கிறது.

இறுதியாக மேற்சொன்ன தகவல்களில் இருந்து, கலோாிகளை எாிப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும், தசைகளின் வலுவை அதிகாிப்பதற்கும், நடைப்பயிற்சியை விட சைக்கிளிங் பயிற்சியே சிறந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது. எலும்புகளின் அடா்த்தியை அதிகாிக்க வேண்டும் என்றால் அதற்கு நடைப்பயிற்சி சிறந்த ஒன்றாக இருக்கும். மிதிவண்டி ஓட்டுவதில் சிரமப்படும் வயதில் முதிா்ந்தவா்கள் தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் எலும்புப்புரை (osteoporosis), எலும்பு கீழ்வாதம் (osteo-arthiritis) மற்றும் எலும்புத் திண்மக் குறை (osteopenia) போன்ற பிரச்சினைகளைக் குறைக்கலாம்.



Click here to join whatsapp group for daily health tip 

No comments:

Post a Comment